அலுவலகம் வர அடம்பிடிக்கும் ஐடி துறையினர்: சர்வேயில் தகவல்

Updated : ஆக 04, 2022 | Added : ஆக 04, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
காயர்ஸ் (Colliers) மற்றும் ஆவ்பிஸ் (Awfis) நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி கோவிட் பாதிப்புகள் குறைந்ததால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்புவது அதிகரித்துள்ளது. இதில் ஐடி துறையினர் மட்டும் பின் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர்களது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: கோவிட் மூன்றாவது அலை பிப்ரவரியில் குறையத் தொடங்கியது.
Work_From_Home, Work_at_Home, IT_dude, IT_News, IT_jobs

காயர்ஸ் (Colliers) மற்றும் ஆவ்பிஸ் (Awfis) நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி கோவிட் பாதிப்புகள் குறைந்ததால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்புவது அதிகரித்துள்ளது. இதில் ஐடி துறையினர் மட்டும் பின் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: கோவிட் மூன்றாவது அலை பிப்ரவரியில் குறையத் தொடங்கியது. அப்போதிலிருந்து அலுவலகத்திற்குத் திரும்புபவர்கள் எண்ணிக்கை வேகம் பெற்றது. அதன்படி, ஜூன் 2022-க்குள் சுமார் 34% நிறுவனங்கள் 75 - 100% ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்திருந்தன. தொலைத்தொடர்பு மற்றும் கன்சல்டிங் துறையினர் தான் இது 75 முதல் 100 சதவீதத்தினர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கான விகிதத்தில் 25% என்ற குறைவான அளவே உள்ளனர்.


latest tamil news


ஜனவரி - ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் டாப் 6 நகரங்களில் 35 லட்சம் சதுரஅடிக்கான பிளெக்சிபிள் அலுவலக இடங்கள் லீசுக்கு விடப்பட்டுள்ளன. 2021 முழு ஆண்டுடன் ஒப்பிடும் போது இது நான்கில் 3 பங்காகும். கணக்கெடுப்பில் பங்கேற்ற 74% பேர் டிஸ்டிரிப்யூடட் ஒர்க்ஸ்பேசை ஏற்பதாக கூறியுள்ளனர். 53% பேர் வீட்டில் இருந்தும், அலுவலகத்திற்கு வந்தும் கலப்பு முறையில் வேலை செய்ய விரும்புகின்றனர்.

இந்த கணக்கெடுப்பு நிறுவனங்களின் முதலாளிகள், சி.இ.ஓ.,க்கள், சி.ஓ.ஓ.,க்கள், போன்றவர்களிடம் நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களின் நிறுவனங்களில் 500 முதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sunny raja -  ( Posted via: Dinamalar Android App )
05-ஆக-202200:45:31 IST Report Abuse
sunny raja சாயந்திரம் ஒசி பிட்சாவும் காபியும் உண்டுன்னு சொன்னா ஆபிசுக்கு வந்துடுவானுக!
Rate this:
Cancel
thiagarajan -  ( Posted via: Dinamalar Android App )
04-ஆக-202221:56:13 IST Report Abuse
thiagarajan மத்திய மற்றும் தமிழ் மாநில அரசு ஊழியர்களை விட சோம்பேறி சிங்கங்களாக இருப்பார்கள் போலிருக்கிறது.
Rate this:
Cancel
04-ஆக-202219:04:40 IST Report Abuse
ஆரூர் ரங் 1 வீட்டுக்காரி அனுமதி கிடைப்பதில்😛 கஷ்டங்கள்.2 கொரோனா சமயத்தில் கைலி யுடன் வீட்டில் இருந்து இருந்து பேண்ட் போடுற து எப்படின்னு மறந்து பேச்சே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X