சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'பணம் குடுத்துட்டா புண்ணியம்!'

Added : ஆக 04, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
'பணம் குடுத்துட்டா புண்ணியம்!'மின் கட்டண உயர்வை கண்டித்து, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.அமைப்பு செயலர் சிவசாமி பேசுகையில், 'தற்போது நுாற்றுக்கணக்கான வாகனங்களில், தொண்டர்கள் வந்து சேர்ந்துள்ளனர். காங்கேயம் பகுதியில் இருந்து,
பக்க வாத்தியம்


'பணம் குடுத்துட்டா புண்ணியம்!'



மின் கட்டண உயர்வை கண்டித்து, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.அமைப்பு செயலர் சிவசாமி பேசுகையில், 'தற்போது நுாற்றுக்கணக்கான வாகனங்களில், தொண்டர்கள் வந்து சேர்ந்துள்ளனர். காங்கேயம் பகுதியில் இருந்து, நுாற்றுக்கணக்கில் வந்த வாகனங்கள், நகருக்குள் வர முடியாமல் நெரிசலில் சிக்கியுள்ளன.
'திருப்பூர் வடக்கு பகுதியில் இருந்து வந்தவர்கள், புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இருந்து வந்து சேர அரை மணி நேரமாகியுள்ளது. தமிழக அரசுக்கு எதிராக மக்கள் போராடத் துவங்கி விட்டனர்' என்றார்.இதைக் கேட்ட தொண்டர் ஒருவர், 'காங்கேயம் வண்டிகள் வருதோ, இல்லையோ... நாங்க வந்த வண்டிக்கு, சொன்ன மாதிரி பணத்தை குடுத்துட்டீங்கன்னா புண்ணியமா போகும்...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-ஆக-202206:18:19 IST Report Abuse
D.Ambujavalli இத்தனை போரையும் 'அள்ளிக்கொண்டு' வந்த பசுக்களுக்கும், 'கூட்டிய' கூட்டத்துக்கும் கொடுக்க நிதி உள்ளது என்றால், இன்னும் பத்து ரெயிடுகள் வந்தாலேகூடத் தாக்குப்பிடிக்க முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X