திண்டுக்கல்,-தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக 16 வயதிற்குட்பட்டோற்கான பி.ஆர். தேவர் கோப்பைக்கான போட்டிகள் 8 மாவட்டங்களில் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகிறது. இதில் திண்டுக்கலில் நடைபெறும் போட்டிகளில் திண்டுக்கல், தஞ்சை அணிகள் வெற்றி பெற்றன. ஸ்ரீவீ கல்லுாரியில் நடந்த இப்போட்டியில் திண்டுக்கல், நீலகிரி, தஞ்சை, ராமநாதபுரம்,கள்ளக்குறிச்சி அணிகள் விளையாடுகின்றன. தஞ்சை ராமநாதபுரம் அணிகள் மோதியதில் டாஸ் வென்ற தஞ்சை அணி பேட்டிங் தேர்வு செய்ய விளையாடியது. 36.4 ஓவரில் 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.அதிகபட்சமாக ஜெயேஷ் யோகேஷ்வரன் 41 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் ஹரிஸ், ஷ்யாம் சபரி தலா 4 விக்கெட் வீழ்த்தினர். பின் விளையாடிய ராமநாதபுரம் அணி 45.2 ஓவரில் 98 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹரிஸ் 35 ரன்கள் எடுத்தார். தஞ்சை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சையத் அபித், திபக் தலா 4 விக்கெட் விழ்த்தினர். பி.எஸ்.என்.ஏ. கல்லுாரியில் நடந்த போட்டியில் திண்டுக்கல், நீலகிரி அணிகள் மோதின. டாஸ் வென்ற நீலகிரிஅணி முதலில் பேட்டிங் ஆடியது. 48.1 ஓவரில் 10விக்கெட் இழப்பிற்க்கு 182 ரன்கள் எடுத்தது. சஞ்சிவ் 62ரன்கள் விளாசினார். திண்டுக்கல் அணி 48.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்க்கு 183 ரன்கள் எடுக்க 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.முகமது பஹிம் 40 ரன்கள் எடுத்தார். கெளரிநாத் 3 விக்கெட் வீழ்த்தினார்.இன்று நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல், -தஞ்சை, நீலகிரி-, கள்ளகுறிச்சி அணிகள் மோதுகின்றன.