அலைபேசி டவரின்றி மலை கிராம மக்கள்...ஏக்கம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
: திண்டுக்கல் -மாவட்டத்தில் உள்ள மலை கிராம மக்கள் அலைபேசி டவர் வசதி இல்லாமல் தகவல் தொடர்பு வசதி இன்றி தனி தீவில் இருப்பது போல் தவித்து வருகின்றனர். அறிவியல் தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சி பெற்ற இக்காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வசதியே இல்லாத கிராமங்களும் உள்ளநிலையில் இது பலருக்கு பெரும் ஆச்சிரியத்தையே ஏற்படுத்துகிறது.மாவட்டத்தில் நத்தம், சிறுமலை, செந்துறை,

: திண்டுக்கல் -மாவட்டத்தில் உள்ள மலை கிராம மக்கள் அலைபேசி டவர் வசதி இல்லாமல் தகவல் தொடர்பு வசதி இன்றி தனி தீவில் இருப்பது போல் தவித்து வருகின்றனர்.

அறிவியல் தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சி பெற்ற இக்காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வசதியே இல்லாத கிராமங்களும் உள்ளநிலையில் இது பலருக்கு பெரும் ஆச்சிரியத்தையே ஏற்படுத்துகிறது.மாவட்டத்தில் நத்தம், சிறுமலை, செந்துறை, செங்குறிச்சி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் அலைபேசி டவர் வசதி இல்லாத நிலையில் இன்றளவும் சிக்னல் இல்லாததால் அலைபேசியை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாக வாழ்க்கையின் நடைமுறைகளை எளிதாக்கும் அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்த முடியாமல் 20 ஆண்டுகளுக்கு பின் தங்கிய நிலையில் உள்ளனர். இவர்கள் மருத்துவ உதவி, அவசர தேவைகளுக்கு, வியாபாரம் என அனைத்திற்கும் நேரடியாக சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. விபத்து நேரங்களில் அவசரத்திற்கு ஆம்புலன்ஸை கூட அழைக்க முடியாது தவிக்கின்றனர். இது போன்ற தகவல் தொடர்பின்றி தவிக்கும் கிராமங்களில் டவர் வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...................

வசதிகள் இன்றி தவிப்பு

அறிவியல் வளர்ச்சியால் தகவல் தொழில்நுட்பம் பன்மடங்கு வளர்ந்து விட்டது. இதனால் வியாபாரம் பண பரிமாற்றம் என அனைத்தும் எளிதாக நடக்கிறது. ஆனால் அலைபேசி டவர் இல்லாததால் சிக்னல் வசதியின்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், குறிப்பாக மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது போன்ற வசதிகளை பெற முடிவதில்லை. இப்பகுதிகளில் அலைபேசி டவர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அப்போதுதான் அப்பகுதி மக்கள் கல்வி உட்பட அனைத்திலும் வளர்ச்சி அடைய அது பெரும் உதவியாக இருக்கும். லோகநாதன், நிர்வாக இயக்குனர், டில்லோ டெக்ஸ்டைல்ஸ், நத்தம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X