தொடர் மழையால் பழநியில் வெள்ள அபாய எச்சரிக்கை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பழநி -மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழையால் அணைகளில் நீர் திறக்கப்படுவதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பழநி பகுதியில் பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி , குதிரையாறு அணைகள் மேற்கு மலை தொடர்ச்சியில் பெய்து வரும் தொடர் மழையால் அதிக நீர்வரத்தை பெற்றுள்ளது. வரதமா நதி அணை நிரம்பி வழிகிறது. மற்ற இரு அணைகளும் முழு அளவை எட்டும் நிலையை



பழநி -மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழையால் அணைகளில் நீர் திறக்கப்படுவதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பழநி பகுதியில் பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி , குதிரையாறு அணைகள் மேற்கு மலை தொடர்ச்சியில் பெய்து வரும் தொடர் மழையால் அதிக நீர்வரத்தை பெற்றுள்ளது. வரதமா நதி அணை நிரம்பி வழிகிறது. மற்ற இரு அணைகளும் முழு அளவை எட்டும் நிலையை அடைந்துள்ளது. அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவைப் பொறுத்து எந் நேரத்திலும் அணை உபரி நீர் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குதிரையாறு அணை ,பாலாறு-பொருந்தலாறு அணை நீர் செல்லும் சண்முக நதி , குதிரையாறு கரையோரங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேற்று காலை நிலவரப்படி பாலாறு பொருந்தலாறு அணையில் 61 அடி (65 அடி) நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 598 கன அடி நீர் உள்வரத்தும், 24 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.வரதமாநதி அணையில் வினாடிக்கு 575 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.குதிரையாறு அணையில் 77 அடி (80 அடி) தண்ணீர் உள்ள நிலையில் வினாடிக்கு 91 கன அடி நீர் வரத்தும், வெளியேற்றமும் உள்ளது.பழநியில் உள்ள மூன்று அணைகளிலும் 85 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் இருப்பு இருப்பதோடு அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X