அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்: துறைகள் ஒருங்கிணைய நடவடிக்கை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், துறைகளை ஒருங்கிணைத்து, திட்டத்தை முழுமையாக செயல்படுத்த பணிகள் தீவிரமடைந்துள்ளது.கிராமங்களில் வேளாண் மற்றும் அது சார்ந்த திட்டங்களை முழு அளவில் செயல்படுத்த, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ், தரிசுநிலங்களில் ஆழ்துளை

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், துறைகளை ஒருங்கிணைத்து, திட்டத்தை முழுமையாக செயல்படுத்த பணிகள் தீவிரமடைந்துள்ளது.கிராமங்களில் வேளாண் மற்றும் அது சார்ந்த திட்டங்களை முழு அளவில் செயல்படுத்த, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் கீழ், தரிசுநிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து விளைநிலமாக மாற்றுவது, விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்குவது, வேளாண் விவசாய உபகரணங்கள் வழங்குவது, பிரதமரின் கவுரவ ஊக்கத் தொகையை தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்வது, தானியப்பயிர் சாகுபடி ஊக்குவிப்பு உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இத்திட்டம், வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டாலும், அந்தந்த பகுதியில் அறிவியல் நிலையங்கள், வேளாண்மை பொறியியல் துறை, ஆதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, பட்டுவளர்ச்சி, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊராட்சி நிர்வாகங்கள், கூட்டுறவு சங்கங்கள் என, அனைத்து துறைகளின் பங்களிப்பு அவசியம்.
இம்முறை, இத்துறைகளை ஒருங்கிணைத்து, திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் வட்டார அளவில் இருந்தே, அனைத்துத் துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, திட்டத்தை செயல்படுத்த வேளாண்மை துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.அதற்கான ஒருங்கிணைப்பு பணியில் வேளாண் துறையினரும் ஈடுபட துவங்கியுள்ளனர். அதேநேரம், வட்டார அளவிலான அலுவலர்கள் இணைந்து செயலாற்ற அந்தந்த துறை சார்ந்த மாவட்ட அலுவலர்கள் உரிய அனுமதியும். ஒத்துழைப்பும் வழங்க வேண்டியதும் அவசியமாகி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X