தந்தைக்காக உணவு வினியோகிக்கும் வேலையில் ஈடுபடும் 7 வயது சிறுவன்

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி :தந்தை விபத்தில் சிக்கியதால், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உணவு வினியோகிக்கும் வேலையில், 7 வயது சிறுவன் ஈடுபட்டுள்ள செய்தி, சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.உணவுப் பொருட்களை வீட்டிற்கு வந்து வினியோகிக்கும், 'ஜொமாட்டோ' நிறுவனத்தில், ராகுல் மிட்டல் என்பவர் உணவு 'ஆர்டர்' செய்திருந்தார். அவருக்கான உணவுப் பொருளை, 7 வயது சிறுவன் ஒருவன்
தந்தை  உணவு வினியோகிக்கும் வேலை  7 வயது சிறுவன்


புதுடில்லி :தந்தை விபத்தில் சிக்கியதால், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உணவு வினியோகிக்கும் வேலையில், 7 வயது சிறுவன் ஈடுபட்டுள்ள செய்தி, சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
உணவுப் பொருட்களை வீட்டிற்கு வந்து வினியோகிக்கும், 'ஜொமாட்டோ' நிறுவனத்தில், ராகுல் மிட்டல் என்பவர் உணவு 'ஆர்டர்' செய்திருந்தார்.
அவருக்கான உணவுப் பொருளை, 7 வயது சிறுவன் ஒருவன் வினியோகித்துள்ளார்.அந்தச் சிறுவனுடன் ராகுல் மிட்டல் உரையாடும் 'வீடியோ'வை, சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டு உள்ளார். அதில், தந்தை விபத்தில் சிக்கியதால், குடும்பத்தை காப்பாற்ற, அவருடைய வேலையை செய்வதாக அந்தச் சிறுவன் கூறிஉள்ளார்.காலையில் பள்ளிக்குச் செல்லும் அந்த சிறுவன், மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை சைக்கிளில் சென்று உணவுப் பொருட்களை வினியோகிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

பதிவிட்டவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அந்தச் சிறுவன் குறித்த விபரமும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, சமூக வலைதளப் பதிவில், அந்த நிறுவனத்தின் பெயரையும் அவர் இணைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனின் தந்தைக்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில், அந்தச் சிறுவனின் பொறுப்புணர்வுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து பதிவிட்டுஉள்ளனர். அதே நேரத்தில், சிறுவன் வேலைக்குச் செல்வதற்கு பலர் கண்டனமும், வேதனையும் தெரிவித்து உள்ளனர்.இந்த சம்பவம் டில்லியில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
05-ஆக-202217:33:47 IST Report Abuse
sankar மகண தந்தைக் காற்றும் உதவி. இந்த சிறுவன் பிற்காலத்தில் பெரிய அளவில் பிரகாசிப்பான் என்பது உறுதி.
Rate this:
Cancel
05-ஆக-202213:10:27 IST Report Abuse
அப்புசாமி பள்ளிக்கு போகும் முன்னாடியே நல்ல வேலை. சீக்கிரம் டூ வீலர் வாங்கிடு தம்பி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X