ஆவாரஞ்செடி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சி அம்மாபட்டியில், பழமை வாய்ந்த ஆவாரஞ்செடி அம்மன் கோவில் உள்ளது. கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. அன்று மாலை 5:00 மணிக்கு, முதற்கால யாக பூஜை துவங்கியதும், கருப்புசாமி கோவிலில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இரவு 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது.விநாயகர் பூஜை,
ஆவாரஞ்செடி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சி அம்மாபட்டியில், பழமை வாய்ந்த ஆவாரஞ்செடி அம்மன் கோவில் உள்ளது. கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. அன்று மாலை 5:00 மணிக்கு, முதற்கால யாக பூஜை துவங்கியதும், கருப்புசாமி கோவிலில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இரவு 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது.விநாயகர் பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பூஜைகளுக்கு பிறகு, இரவு 9:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை நடந்தது. இரவு 10:00 மணிக்கு மேல், தேவராட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை நடந்தது.அம்மனுக்கு மூலமந்திரம், சக்தி மகாலட்சுமி ேஹாமம், தசா பூஜை நடந்தது. காலை 10:15 மணிக்கு, விமான கோபுரம் மற்றும் ஆவாரஞ்செடி அம்மனுக்கு கும்பாபிேஷகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X