கூட்டுறவு சங்கம் பெயரில் ஆட்சேர்க்கை: கலெக்டர் எச்சரிக்கை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
உடுமலை:பன்மாநில கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் வெளியிடப்படும், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விளம்பரங்களுக்கும் மத்திய, மாநில அரசுகளின் கூட்டுறவு சங்கங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.திருப்பூர் கலெக்டர் வினீத் அறிக்கை:பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் என்பது முற்றிலும் தன்னாட்சி பெற்ற, அதன் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொறுப்பாக்கப்பட்ட

உடுமலை:பன்மாநில கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் வெளியிடப்படும், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விளம்பரங்களுக்கும் மத்திய, மாநில அரசுகளின் கூட்டுறவு சங்கங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.திருப்பூர் கலெக்டர் வினீத் அறிக்கை:பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் என்பது முற்றிலும் தன்னாட்சி பெற்ற, அதன் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொறுப்பாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பு மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம், தமிழக மத்திய கூட்டுறவு சங்க பதிவாளர் நிர்வாக கட்டுப்பாட்டில் இல்லை. இவற்றால் ஏற்படும் நிதி இழப்புக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வகையிலும் பொறுப்பேற்காது. அதன் டிபாசிட்களுக்கு மத்திய அல்லது மாநில பதிவாளர் எந்த உத்தரவாதமும் தரவில்லை.இது போன்ற அமைப்புகளில் முதலீடு செய்ய வேண்டாம். இதுதவிர, சமூக வலைதளங்களில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்ற நிரந்தர ஊழியர்கள் தேவை என சில இணையதளங்களில், விளம்பரம் வெளியிட்டு, சம்பளம், பணியாற்றும் ஊர்கள் குறித்த விபரங்களுடன், சேலம் மாவட்ட நெசவாளர் மற்றும் டெக்ஸ்டைல் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் பெயரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.இதில் பணிக்கு முன் பணம் செலுத்தி பயிற்சி பெற்றால், நிரந்தரப் பணி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கம் கூட்டுறவு துறையில் எந்த வகையிலும் பதிவு செய்யப்படவில்லை. கூட்டுறவு சங்கங்களுக்கு உரிய ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக மட்டுமே முறையான அறிவிப்பு வெளியிட்டு சேர்க்கை நடைபெறும். எனவே, இது போல் பணம் பறிக்கும் நோக்கில் வெளியாகும் விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X