போலீஸ் செய்திகள்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
டிரைவர் தற்கொலைவடமதுரை : கொல்லப்பட்டியை சேர்ந்த வேன் டிரைவர் ஸ்ரீபதி 50. இவர் மனைவி தேனி நீதிமன்றத்தில் பணிபுரிகிறார். தனியே வசித்து வந்த ஸ்ரீபதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.கார் விற்பதாக கூறி மோசடிவடமதுரை: செங்குறிச்சி அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர்



டிரைவர் தற்கொலை

வடமதுரை : கொல்லப்பட்டியை சேர்ந்த வேன் டிரைவர் ஸ்ரீபதி 50. இவர் மனைவி தேனி நீதிமன்றத்தில் பணிபுரிகிறார். தனியே வசித்து வந்த ஸ்ரீபதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.கார் விற்பதாக கூறி மோசடிவடமதுரை: செங்குறிச்சி அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 25. கம்பளியம்பட்டியில் அலைபேசி சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார். கார் வாங்க முடிவு செய்து இணையதளங்களில் தேடிய போது சென்னை திருவான்மியூரை சேர்ந்த சுதர்சன் தன்னிடம் இருக்கும் காரை விற்க இருப்பதாக கூறி அறிமுகமனார். கிருஷ்ணமூர்த்தி ரூ.42,000 கொடுத்தார் .அதன்பின் சுதர்சன் அலைபேசி எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.பெற்றோரை தாக்கிய மகன் கைதுவடமதுரை : பாடியூர் அருகே இ.புதுார் களத்து வீட்டைசேர்ந்த ஓய்வு பஸ் கண்டக்டர் சுப்பிரமணியன் 64. இவரது மனைவி முருகம்மாள் 56. இவர்களின் மகனான பாலகிருஷ்ணன் 36, தந்தையிடம் ரூ. 20 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். தர மறுத்ததால் தந்தையின் டூவீலரை பறித்துக் கொண்டார். இதை தாய் முருகம்மாள் கண்டித்தார். ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் பெற்றோரை தாக்கினர். வடமதுரை போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். அரசு பஸ் மோதி பலிஒட்டன்சத்திரம்: கோதைமங்கலம் பெரும்பாறையை சேர்ந்தவர் ஆறுமுகம் 47. டூவீலரில் பழநி ரோட்டில் புது அத்திக்கோம்பை பிரிவு சென்றார். எதிரே வந்த அரசு பஸ் மோதி பலியானார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர். ஒருவர் பலிநெய்க்காரப்பட்டி: பழநி பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கொத்தனார் நந்தகுமார் 34. நேற்று முன் தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த தனியார் தோட்டத்திற்கு சென்றார். அங்கு கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.போக்சோவில் கைதுதிண்டுக்கல்: செல்லாண்டியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் முருகன்44. திருமணமாகி 2குழந்தைகள் உள்ள நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக 35 வயது பெண் ஒருவரை திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு 11 வயதில் பெண்குழந்தை உள்ளது. ஒன்றாக வசித்து வந்த நிலையில், சிறுமிக்கு முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தாடிக்கொம்பு போலீசார் முருகனை போக்சோவில் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X