கல்லூரி காதல் குறித்து பெற்றோரிடம் புகார் :பேராசிரியர் மீது தாக்குதல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கல்லூரியில் மாணவரின் காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்த பேராசிரியர் தாக்கப்பட்டார். இரு நாட்களாகியும் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை மறைத்து வருகின்றனர்.கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. பி.எஸ்.சி.கணிதம் மூன்றாம் ஆண்டு பயிலும் ஒரு மாணவர் சக மாணவியை
கல்லூரி காதல் குறித்து பெற்றோரிடம் புகார் :பேராசிரியர் மீது தாக்குதல்

தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கல்லூரியில் மாணவரின் காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்த பேராசிரியர் தாக்கப்பட்டார்.
இரு நாட்களாகியும் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை மறைத்து வருகின்றனர்.கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. பி.எஸ்.சி.கணிதம் மூன்றாம் ஆண்டு பயிலும் ஒரு மாணவர் சக மாணவியை காதலித்தார்.
இது குறித்து பேராசிரியர் சிவசங்கரன் இருவரது பெற்றோரிடம் தெரிவித்தார். ஆத்திரமுற்ற அந்த வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் சேர்ந்து துறை அலுவலகத்தில் இருந்த சிவசங்கரனை தாக்கினர். அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
மேற்கு போலீசார் கல்லூரியில் பேராசிரியர் தாக்கப்படும் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை எடுத்து சென்றனர்.முதல்வர் நிர்மலா பேராசிரியரை தாக்கிய இரு மாணவர்களை சஸ்பெண்ட் செய்தார். போலீசார் காயம்பட்டவரிடம் புகார் பெற்று வழக்கு பதிவு செய்ய வில்லை. தாக்கியவர்களை பாதுகாக்கும் வகையில் போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை அழித்து விட்டதாக சிவசங்கரன் புகார் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X