விபத்து அச்சத்தில் ரோடு விரிவாக்க பணி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
வடமதுரை-வடமதுரை பகுதியில் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி விபத்து அபாயத்துடன் நடப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.வடமதுரையில் இருந்து எரியோடு, வேடசந்துார் வழியாக ஒட்டன்சத்திரம் வரை 43 கி.மீ., நீளம் கொண்ட இந்த ரோடு தற்போது 7 மீட்டர் அகல ரோடாக உள்ளது. இந்த ரோட்டை மேலும் விரிவாக்கம் செய்து 10 மீட்டர் ரோடாக அகலமாக்கும் பணி துவங்கி உள்ளது. இதற்காக


வடமதுரை-வடமதுரை பகுதியில் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி விபத்து அபாயத்துடன் நடப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.வடமதுரையில் இருந்து எரியோடு, வேடசந்துார் வழியாக ஒட்டன்சத்திரம் வரை 43 கி.மீ., நீளம் கொண்ட இந்த ரோடு தற்போது 7 மீட்டர் அகல ரோடாக உள்ளது. இந்த ரோட்டை மேலும் விரிவாக்கம் செய்து 10 மீட்டர் ரோடாக அகலமாக்கும் பணி துவங்கி உள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரோட்டின் ஒரு பக்கம் 1.5 மீட்டர் அகலத்திற்கு 2 அடி ஆழம் வரை மண் வெட்டி அகற்றுகின்றனர். பின்னர் ரோடு ரோலர் இயந்திரம் மூலம் சமன் செய்து ஜல்லி கலந்த கப்பி மண்ணை நிரப்புகின்றனர்.இப்பணி முழுமையாக சராசரியாக 25 நாட்கள் வரை எடுத்து கொள்கின்றனர். தற்போது மழை பெய்வதால் இப்பணி மேலும் சில நாட்கள் தாமதமாகிறது. வெட்டப்பட்ட பள்ளங்களில் இருசக்கர வாகனங்கள், கார்கள் விழும் ஆபத்துடன் பணி நடப்பதால் அவ்வழியே செல்வோர் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

கண்டு கொள்வதில்லை
கே.முருகவேல், அ.தி.மு.க., வார்டு செயலாளர், வடமதுரை லக்கன் தெரு: ரோடு விளம்பில் 1.5 மீட்டர் அகலத்திற்கு பள்ளம் வெட்டுகின்றனர். வாகனங்கள் விழாமல் எச்சரிக்கை செய்யும் வகையில் தற்காலிக ரிப்பன் ரோல் ஏதும் கட்டப்படுவதில்லை. பெயரளவில் மண் மூடைகளை மட்டும் முதல் நாள் வைத்து செல்கின்றனர். ஆனால் இவற்றில் பெரும்பகுதி பள்ளத்திற்குள் விழுந்தே பல நாட்களாக கிடக்கின்றன. அடுத்த நாள் கூட ரோடு பணி ஊழியர்கள் யாரும் இவற்றை எடுத்து ரோடு விளம்பில் வைப்பதில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.

அடிக்

கடி

விபத்து
டி.மோகன்ராஜ், பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர், அய்யலுார்: ரோடு விரிவாக்கப்பணி நடக்கும் ரோடுகளில் இரவு நேரத்தில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தில் இத்தகைய பள்ளங்கள் இருப்பது சிறிய வாகனங்களுக்கு தெரிவதில்லை. இதனால் பலர் இருசக்கர வாகனங்களுடன் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதை தவிர்க்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பயனற்ற பாலங்கள்
கே.அருள்குமார், தி.மு.க., மாவட்ட மீனவரின் துணை அமைப்பாளர், குருந்தம்பட்டி: வடமதுரை நால்ரோடு சந்திப்பில் ஒரு பாலம் மட்டுமே பயன்படுகிறது. திருச்சி, எரியோடு திசை ரோடுகளில் இருக்கும் பாலங்கள் பயனற்று கிடக்கின்றன. வடமதுரை நகர் ரோட்டில் இருந்த 2 ஓடைபாலங்களை நெடுஞ்சாலை துறையினரே மூடியுள்ளனர். இதனால் வடமதுரை நகரின் கழிவு நீரும், மழை நீர் சேர்ந்து நெடுஞ்சாலை ரோட்டில் பாய்கிறது. கூடவே அசுத்தமான பொருட்களும் ரோட்டிற்கு வந்து சேருகிறது.

-தள்ளி விடுறாங்க
முத்துக்குமார், நெடுஞ்சாலை உதவி பொறியாளர்: விபத்தை தவிர்க்க பள்ளம் தோண்டிய பகுதி ரோடு விளம்பில் வைக்கப்படும் எச்சரிக்கை மூடைகளை மர்ம நபர்கள் தள்ளி விட்டு செல்கின்றனர். சில இடங்களில் திருடும் போய்விடுகின்றன. இதற்காக அப்படியே விட்டுவிடாமல் போதிய எச்சரிக்கை ஏற்பாடுகளை தொடர்ந்து வைக்கவும், கண்காணிக்கவும் ரோடு பணி நிறுவனத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X