தொடர் மழையால் நகரில் பாதிப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை பகுதிகளில், நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்து வருகிறது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், தொடர் மழை பெய்து வருகிறது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதோடு, கிராமங்களிலுள்ள குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இதனால், உடுமலை நகர பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, ரோடுகளில் மழை நீர் தேங்கி,
தொடர் மழையால் நகரில் பாதிப்பு

உடுமலை:உடுமலை பகுதிகளில், நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்து வருகிறது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், தொடர் மழை பெய்து வருகிறது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதோடு, கிராமங்களிலுள்ள குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இதனால், உடுமலை நகர பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, ரோடுகளில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதித்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகம், குண்டும், குழியுமாக உள்ள நிலையில், மழை நீர் தேங்கி, சிறு, சிறு குட்டைகளாக பஸ் ஸ்டாண்ட் வளாகம் மாறியுள்ளது. இதனால், பஸ்கள் வருவதிலும், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளும் கடுமையாக பாதித்து வருகின்றனர். நகர முக்கிய ரோடுகளில், மழை நீர் தேங்கியதால், மக்கள் சிரமப்பட்டனர். தொடர் மழை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.நேற்று முன்தினம் முதல் நேற்று காலை,8:00 மணி வரையில், உடுமலையில், 11.30 மி.மீ.மழை பதிவாகியிருந்தது. மடத்துக்குளத்தில், 14 மி.மீ.,; திருமூர்த்தி அணைப்பகுதியில், 40 மி.மீ.,; அமராவதி அணை, 20 மி.மீ., திருமூர்த்தி அணை ஆய்வு மாளிகை பகுதியில், 36 மி.மீ., மற்றும் நல்லாறு அணைப்பகுதியில், 42 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. நேற்று பகல் முழுவதும், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார பகுதியில், தொடர்ந்து மழை பொழிவு காணப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X