கறிக்கோழி விற்பனை சரிவு கொள்முதல் விலை குறைப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பல்லடம்:கறிக்கோழி விற்பனை சரிந்ததால் கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது.கறிக்கோழி கொள்முதல் விலையை பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவான பி.சி.சி. நிர்ணயம் செய்கிறது.பி.சி.சி. செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது:தமிழகத்தில் ஆடி மாதம் காரணமாக கறிக்கோழி விற்பனை பெரிதும் குறைந்துள்ளது. இதேபோல் கேரளாவில் மீன் வரத்து அதிகரித்து கறிக்கோழிகள் விற்பனை சரிந்துள்ளது.

பல்லடம்:கறிக்கோழி விற்பனை சரிந்ததால் கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கறிக்கோழி கொள்முதல் விலையை பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவான பி.சி.சி. நிர்ணயம் செய்கிறது.பி.சி.சி. செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது:தமிழகத்தில் ஆடி மாதம் காரணமாக கறிக்கோழி விற்பனை பெரிதும் குறைந்துள்ளது. இதேபோல் கேரளாவில் மீன் வரத்து அதிகரித்து கறிக்கோழிகள் விற்பனை சரிந்துள்ளது.
விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் 15 சதவீதம் கூடுதல் உற்பத்தி மேற்கொள்ளப் பட்டது. ஆனால் 15 -- 20 சதவீதம் வரை விற்பனை சரிவடைந்துள்ளது.நுகர்வு குறைந்ததால் பண்ணைகளில் கறிக்கோழிகள் தேக்கமடைந்து வருகின்றன.
கோழிகளுக்கு கூடுதல் தீவன செலவு ஏற்படுவதுடன் அதிக நாட்கள் பண்ணைகளில் வைத்து பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது.இதை தவிர்க்கும் நோக்கில் கோழிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோ 66 ரூபாய் என ஆக. 8ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் ஏற்படும் விற்பனை மாற்றத்தை பொறுத்து கொள்முதல் விலையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X