நர்சிங் படித்தால் வேலையிருக்குநர்சிங் போர்டு பதிவாளர் தகவல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கோவை:''உலகம் முழுவதும், 4 லட்சம் நர்ஸ்சிங் படித்தோருக்கு தேவை உள்ளது,'' என, தமிழ்நாடு நர்சிங் போர்டு பதிவாளர் ஆனி கிரேஸ் கலைமதி பேசினார்.சரவணம்பட்டியில் உள்ள, பி.பி.ஜி., நர்சிங் கல்லுாரியில் விளக்கேற்றும் விழா நடந்தது; கல்லுாரி தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழ்நாடு நர்சிங் போர்டு பதிவாளர் ஆனிகிரேஸ் கலைமதி பேசுகையில், ''நர்சிங்

கோவை:''உலகம் முழுவதும், 4 லட்சம் நர்ஸ்சிங் படித்தோருக்கு தேவை உள்ளது,'' என, தமிழ்நாடு நர்சிங் போர்டு பதிவாளர் ஆனி கிரேஸ் கலைமதி பேசினார்.சரவணம்பட்டியில் உள்ள, பி.பி.ஜி., நர்சிங் கல்லுாரியில் விளக்கேற்றும் விழா நடந்தது; கல்லுாரி தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழ்நாடு நர்சிங் போர்டு பதிவாளர் ஆனிகிரேஸ் கலைமதி பேசுகையில், ''நர்சிங் கல்லுாரி மாணவர்கள், அர்ப்பணிப்பு உணர்வோடும், நோயாளிகளை பரிவுடனும் கவனித்துக் கொள்ள வேண்டும். தாய்மை உணர்வுடன் நோயாளிகளை அணுகும்போது விரைவில் குணமடைகின்றனர். உலகம் முழுவதும் அதிக தேவை உள்ள ஒரு பணி நர்சிங். தற்போதைய அளவில், உலகம் முழுவதும் 4 லட்சம் பேருக்கு வேலை காத்திருக்கிறது. திறமையை வளர்த்துக் கொண்டால், எளிதாக வேலை பெற முடியும்,'' என்றார்.நிகழ்ச்சியில், பி.பி.ஜி., கல்வி குழுமங்களின் தாளாளர் சாந்தி, அறங்காவலர் அக்சய், கல்லுாரி முதல்வர் லிங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 120 மாணவியர் விளக்கேற்றி, அர்ப்பணிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X