மேகமலையில் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ள இடங்களில் தடுப்புச்சுவர் பணி தீவிரம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கம்பம்- -மேகமலையில் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ள இரு இடங்களில் ரூ.38 லட்சத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது.மேகமலை, ஹைவேவிஸ், வெண்ணியாறு, மணலாறு, இரவங்கலாறு பகுதியில் மழை காலங்களில் நிலச்சரிவு ஏற்படும். கடந்த சில ஆண்டுகளில் நிலச்சரிவு ஏற்பட்ட பல இடங்களை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை, சின்னமனுாரிலிருந்து ஹைவேவிஸ் செல்லும்



கம்பம்- -மேகமலையில் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ள இரு இடங்களில் ரூ.38 லட்சத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது.மேகமலை, ஹைவேவிஸ், வெண்ணியாறு, மணலாறு, இரவங்கலாறு பகுதியில் மழை காலங்களில் நிலச்சரிவு ஏற்படும். கடந்த சில ஆண்டுகளில் நிலச்சரிவு ஏற்பட்ட பல இடங்களை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை, சின்னமனுாரிலிருந்து ஹைவேவிஸ் செல்லும் மலைப்பாதையில் சென்டர் கேம்ப் என்ற இடத்தில் 19 வது கொண்டை ஊசி வளைவில் 45 மீ., நீளத்திற்கும், 16 கொண்டைஊசி வளைவில் 21 மீ., நீளத்திற்கும் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் இரு தடுப்பு சுவர்கள் கட்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த இடங்களிலும் பலமுறை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு தடுப்பு சுவர் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. வனத்துறை அனுமதி தாமதமாக கிடைத்ததால் மழை காலத்தில் துவங்க வேண்டியுள்ளது. அனுமதி தாமதம் இன்றி கிடைத்து இருந்தால் மழைக்கு முன் பணிகளை முடித்திருக்கலாம் என்று நெடுஞ்சாலைத்துறையின் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X