நெய் வாங்கியவர்கள் பொய் பேச்சு?ரூ.7.26 லட்சம் ஏமாற்றியதாக வலை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கோவை:கொள்முதல் செய்த நெய்க்கு, 7.26 லட்சம் ரூபாய் தராமல் மோசடி செய்த மூவரை, கோவை கடை வீதி போலீசார் தேடி வருகின்றனர்.கோவை வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி டயரி லிமிடெட் நிறுவனத்தில், கண்ணன், 55 மேலாளராக உள்ளார். இந்நிறுவனத்தை, 'கிசான் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் சென்டர்' அதிகாரிகள் என, அறிமுகம் செய்து கொண்ட ஜெய்கணேஷ், கிருஷ்ணகுமார், பாண்டியராஜன் ஆகியோர் தொடர்பு

கோவை:கொள்முதல் செய்த நெய்க்கு, 7.26 லட்சம் ரூபாய் தராமல் மோசடி செய்த மூவரை, கோவை கடை வீதி போலீசார் தேடி வருகின்றனர்.கோவை வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி டயரி லிமிடெட் நிறுவனத்தில், கண்ணன், 55 மேலாளராக உள்ளார். இந்நிறுவனத்தை, 'கிசான் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் சென்டர்' அதிகாரிகள் என, அறிமுகம் செய்து கொண்ட ஜெய்கணேஷ், கிருஷ்ணகுமார், பாண்டியராஜன் ஆகியோர் தொடர்பு கொண்டனர்.தங்கள் நிறுவனம், மத்திய அரசின் சார்பு நிறுவனம் என்றும், நாடு முழுவதும் விவசாய ரேஷன் கடைகளை நடத்தி வருவதாகவும், அதற்கு நெய் பாட்டில்களை சப்ளை செய்யுமாறும், கேட்டுக் கொண்டனர்.அதை நம்பிய கண்ணன், அவர்கள் தெரிவித்த முகவரிக்கு ரூ.12 லட்சத்து, 70 ஆயிரம் மதிப்புடைய நெய் பாட்டில்களை அனுப்பினார். இதில் ரூ.4 லட்சத்து, 12 ஆயிரம் மதிப்புள்ள நெய் பாட்டில்களை, ஜெய் கணேஷ் தரப்பினர் திருப்பி அனுப்பி விட்டனர்.மொத்தம் ஒரு லட்சத்து, 31 ஆயிரம் ரூபாய் மட்டும் பணம் கொடுத்தனர். இன்னும், 7 லட்சத்து, 26 ஆயிரம் ரூபாய் தராமல் ஏமாற்றி விட்டதாக கண்ணன், கோவை கடை வீதி போலீசில் புகார் தெரிவித்தார்.விசாரித்த எஸ்.ஐ., கோமதி, ஜெய் கணேஷ் உள்ளிட்ட மூவர் மீதும் வழக்கு பதிந்தார். சம்பந்தப்பட்ட மூவரும், உண்மையிலேயே மத்திய அரசு நிறுவன அதிகாரிகளா, நிறுவனத்தின் பெயரைச் சொல்லி மோசடி செய்தார்களா என்று, இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் விசாரித்து வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X