வாக்காளர் அடையாள அட்டையுடன்ஆதார் எண் இணைக்கும் பணி ஜரூர்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஊட்டி,;'வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் வாய்ப்பினை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,' என, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், கலெக்டர் அம்ரித் பேசியதாவது:அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக, திருத்தங்கள்

ஊட்டி,;'வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் வாய்ப்பினை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,' என, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், கலெக்டர் அம்ரித் பேசியதாவது:அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்களுடைய ஆதார் அட்டை குறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம், 6பி-ல் சமர்பிக்க வேண்டும். இப்பணி, ஆக., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.வீடு தேடி வரும் வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம், வாக்காளர்கள் தங்களது சுயவிருப்பத்துடன் ஆதார் எண்ணை தெரிவித்து,'கருடா' செயலி மூலம் பதிவு செய்துகொள்ளலாம். அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடமும் இதனைபதிவு செய்துகொள்ளலாம். அனைத்து வாக்காளர்கள் இந்த வாய்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனபிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X