வைகை அணையை ஆர்வத்துடன் ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஆண்டிபட்டி-வைகை அணையின் பெரிய, சிறிய மதகுகள் வழியாக வெளியேறும் நீரை பெரிய பாலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்துச் செல்கின்றனர்.வைகை அணை நீர்மட்டம் நேற்று முன் தினம் காலை 9:00 மணிக்கு 70 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 71 அடி. அணைக்கு வரும் நீர் பாதுகாப்பு கருதி 7 பெரிய மதகுகள்,சிறிய மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 68 அடிக்கும்



ஆண்டிபட்டி-வைகை அணையின் பெரிய, சிறிய மதகுகள் வழியாக வெளியேறும் நீரை பெரிய பாலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்துச் செல்கின்றனர்.வைகை அணை நீர்மட்டம் நேற்று முன் தினம் காலை 9:00 மணிக்கு 70 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 71 அடி. அணைக்கு வரும் நீர் பாதுகாப்பு கருதி 7 பெரிய மதகுகள்,சிறிய மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 68 அடிக்கும் அதிகம் இருந்தால் மட்டுமே பெரிய மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும். தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதியில் இருந்து பெரிய பாலம் வழியாக வைகை அணையை கடந்து வாகனங்களில் செல்பவர்கள் பாலத்தில் நின்று தண்ணீர் வெளியேறும் அழகை ரசிக்கின்றனர். பலரும் அலைபேசியில் செல்பி எடுத்து செல்கின்றனர். 10 சதுர மைல் பரப்பில் பறந்து விரிந்துள்ள வைகை அணை நீர் தேக்கத்தையும் சுற்றுலா பயணிகள் ரசித்து குதூகலம் அடைகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X