அகில இந்திய கூடைப்பந்து:கப்பல் படை அணி வெற்றி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கோவை:தேசிய அளவிலான, ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், இந்திய கப்பல் படை அணியும், ஐ.சி.எப்., அணியும் வென்றன.பி.எஸ்.ஜி., ஸ்போர்டஸ் கிளப் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆண்களுக்கான அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. 56வது பி.எஸ்.ஜி., கோப்பைக்கான போட்டி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் நடந்தது. 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் போட்டிகள்

கோவை:தேசிய அளவிலான, ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், இந்திய கப்பல் படை அணியும், ஐ.சி.எப்., அணியும் வென்றன.பி.எஸ்.ஜி., ஸ்போர்டஸ் கிளப் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆண்களுக்கான அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. 56வது பி.எஸ்.ஜி., கோப்பைக்கான போட்டி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் நடந்தது. 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.முதல் போட்டியில் இந்திய கப்பல் படை அணி, 92-91 என்ற புள்ளிக்கணக்கில், எஸ்.டி.ஏ.டி., அணியையும்; 2வது போட்டியில் கேரளா அணி, 60-55 என்ற புள்ளிக்கணக்கில், பேங்க் ஆப் பரோடா அணியையும் வென்றன.மூன்றாவது போட்டியில் ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணி, 73-64 என்ற புள்ளிக்கணக்கில், கேரளா போலீஸ் அணியையும்; நான்காவது போட்டியில் ஐ.சி.எப்., அணி, 85-71 என்ற புள்ளிக்கணக்கில், பஞ்சாப் போலீஸ் அணியையும் வென்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X