பாலத்தில் சாலை சீரமைப்பு பணி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் யூனியன் மில் ரோட்டை இணைக்கும் வகையில், நொய்யல் ஆற்றின் குறுக்கில் உயர் மட்டப் பாலம் உள்ளது. நொய்யல் ஆற்றின் மீது அமைந்துள்ள இந்த பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.பாலத்தின் இரு புறமும் உள்ள ரோடுகள் மட்டம் உயர்வாக உள்ளது. இதனால் மழை நாட்களில் இந்த ரோடு பகுதிகளில் சேகரமாகும் மழை நீர்
பாலத்தில் சாலை சீரமைப்பு பணி

திருப்பூர்:

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் யூனியன் மில் ரோட்டை இணைக்கும் வகையில், நொய்யல் ஆற்றின் குறுக்கில் உயர் மட்டப் பாலம் உள்ளது. நொய்யல் ஆற்றின் மீது அமைந்துள்ள இந்த பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.பாலத்தின் இரு புறமும் உள்ள ரோடுகள் மட்டம் உயர்வாக உள்ளது. இதனால் மழை நாட்களில் இந்த ரோடு பகுதிகளில் சேகரமாகும் மழை நீர் தாழ்வாக உள்ள பாலம் வழியாக வந்து நொய்யலில் சேர்கிறது.இருபுறமும் கழிவுநீர் வடிகால் உள்ளதால், மழைக்காலத்தில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து இப்பகுதியில் பாய்ந்து வருகிறது.நேற்று முன்தினம் அப்பகுதியில் மேயர் தினேஷ்குமார், உதவி கமிஷனர் வாசுகுமார் உள்ளிட்டோர் அங்கு ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் இந்த பாலம் மீதான ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.பாலத்தின் இரு புறமும் அணுகுசாலை மற்றும் பாலம் மீது கான்கிரீட் கலவை கொண்டு குழிகள் நிரப்பி அதன் மீது தார் ரோடு போட அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் நேற்று அங்கு ரோடு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பாலம் மீது மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காணப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X