திருப்பூர்:கல்லுாரி மாணவர் களை, புதுவகை ஆடை தயாரிக்கும் தொழில்முனைவோராக மாற்றுவதற்கான முயற்சியில் அடல் இன்குபேஷன் மையம் களமிறங்கியுள்ளது. இதன் துவக்கமாக, 'நிப்ட்--டீ' கல்லுாரி மாணவர் 30 பேருக்கு நேற்று முதல் பயிற்சி துவங்கியுள்ளது.ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கான அடல் இன்குபேஷன் மையம், திருப்பூர் அருகே முதலிபாளையம் 'டெக்கிக்' வளாகத்தில் இயங்குகிறது. நாடு முழுவதும் உள்ள கல்லுாரி, பல்கலைக்கழகங்கள், திருப்பூர் அடல் இன்குபேஷன் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகின்றன. கல்லுாரி மாணவர்களை, புதுமையான ஆடை தயாரிக்கும் தொழில்முனைவோராக மாற்றுவதற்கான முயற்சியில் இன்குபேஷன் மையம் களமிறங்கியுள்ளது.இதன் துவக்கமாக, 'நிப்ட்--டீ' ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான புதுவகை ஆடை தயாரிப்பு குறித்த பயிற்சி மற்றும் அறிமுக நிகழ்ச்சி, கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மும்பை கம்பளி ஆராய்ச்சி கூட்டமைப்பு இணை இயக்குனர் மிரனால் சவுத்ரி, இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி, அர்சொர்மகா நிறுவன விற்பனை பிரிவு முதன்மை தலைவர் அனந்தராமன் ஆகியோர், விளையாட்டு, மருத்துவம், தொழில்நுட்ப ஜவுளி என புதுவகை ஆடை தயாரிப்பு நுட்பங்கள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி கூறியதாவது:கல்லுாரி படிப்பு முடித்தபின் அடுத்து என்ன செய்வது என்ற தெளிவான பார்வை மாணவர் மத்தியில் குறைவாகவே உள்ளது. படிக்கும் போதே, புதுவகை ஆடை தயாரிப்பு குறித்த ஆர்வத்தை மாணவர் மத்தியில் ஏற்படுத்துவதால், சிறந்த தொழில்முனைவோராக அவர்களை மாற்றிக்காட்ட முடியும்.இந்த நோக்கத்திலேயே, மூன்றாம் ஆண்டு மாண--கடைசி பக்கம் பார்க்க