'மார்பகத்தில் கட்டி இருந்தால் அலட்சியம் கூடாது'

Added : ஆக 05, 2022 | |
Advertisement
''மார்பகத்தில் கட்டி இருந்தால், மெமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் ரூபா ரங்கநாதன்.மேலும் அவர் கூறியதாவது:நமது நாட்டில் பெண்களை அதிகம் பாதிப்பது, மார்பக புற்றுநோய்; இந்நோய் எந்த வயதிலும் வரலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை மெமோகிராம் பரிசோதனை செய்து
'மார்பகத்தில் கட்டி இருந்தால் அலட்சியம் கூடாது'

''மார்பகத்தில் கட்டி இருந்தால், மெமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் ரூபா ரங்கநாதன்.

மேலும் அவர் கூறியதாவது:நமது நாட்டில் பெண்களை அதிகம் பாதிப்பது, மார்பக புற்றுநோய்; இந்நோய் எந்த வயதிலும் வரலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை மெமோகிராம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மெமோகிராம் பரிசோதனை என்பது மார்பகங்களில் மேற்கொள்ளப்படும் துல்லிய எக்ஸ்ரே பரிசோதனை. மிக துல்லியமாக புற்றுநோாய் பாதிப்புகளை கண்டறியலாம்.மார்பக புற்றுநோய் வருவதை தவிர்க்க முடியாவிட்டாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் இறப்புகளை தடுக்கலாம். மார்பகத்தில் ஏற்படும் கட்டிகள் நீர்க்கட்டிகளாகவோ, புற்றுநோய் கட்டிகளாகவோ இருக்கலாம். எதுவாக இருப்பினும் அலட்சியப்படுத்தாமல், டாக்டரை அணுகி,உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.மாதவிடாய் பிரச்னை, உடல் பருமன், உடல் உழைப்பின்மை, கொழுப்பு உணவு வகைகளை அதிகம் உட்கொள்வது, சரியாக தாய்ப்பால் கொடுக்காதது, முதல் குழந்தையை காலதாமதமாக பெற்றெடுப்பது, குழந்தைபேறு இல்லாதது, கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்துதல், ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொள்வது, மன அழுத்தம் மற்றும்தாய், சகோதரிக்கு இப்பாதிப்பு இருத்தால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.மார்பகங்களில் குறிப்பிட்ட இடத்தில் கட்டி போல் இருப்பது, ஒன்றின் தோற்றம் மாறுவது, காம்புகளில் வீக்கம், ஏதாவது ஒரு இடத்தில் நிறம் மாறி தோல் உரிவது, வலி அல்லது ரத்தக்கசிவு ஏற்படுவது போன்றவை அறிகுறிகள். மார்பக புற்றுநோய் குறித்து அச்சப்பட தேவையில்லை. ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை அளித்தால் பாதிப்பை தவிர்க்கலாம். கே.எம்.சி.எச்., ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தில், சர்வதேச தரத்திலான பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.விவரங்களுக்கு, 73393 33485, 0422 - 432 3800

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X