கனமழை பெய்தும் நீர் தேங்காத கண்மாய்கள்: விவசாயிகள் ஏமாற்றம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி பகுதியில் அடுத்தடுத்து மழை பெய்தும் நீர் தேங்காத கண்மாய்களால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பல கண்மாய்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை நீர் ஆதாரமாக உள்ளது. வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து நாகலாறு ஓடை வழியாக வரும் நீர் தெப்பம்பட்டி, கோத்தலூத்து, பிச்சம்பட்டி, ஜி.உசிலம்பட்டி, ஆசாரிபட்டி, பிச்சம்பட்டி,



ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி பகுதியில் அடுத்தடுத்து மழை பெய்தும் நீர் தேங்காத கண்மாய்களால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பல கண்மாய்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை நீர் ஆதாரமாக உள்ளது. வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து நாகலாறு ஓடை வழியாக வரும் நீர் தெப்பம்பட்டி, கோத்தலூத்து, பிச்சம்பட்டி, ஜி.உசிலம்பட்டி, ஆசாரிபட்டி, பிச்சம்பட்டி, ரங்கசமுத்திரம், ஜம்புலிப்புத்தூர், ஏத்தக்கோயில், மறவபட்டி பகுதியில் உள்ள கண்மாய்களில் தேங்கும். ஆண்டிபட்டி பகுதியில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து பரவலான மழை பெய்தாலும் மலைப்பகுதியில் அதிக மழை இல்லை. இதனால் ஓடைகள் வழியாக கண்மாய்களுக்கு நீர் கிடைக்கவில்லை. கண்மாய்களில் நீர் தேங்காததால் நேரடி பாசன விவசாயிகள், நிலத்தடி நீர் ஆதார மூலம் இறவை பாசன விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பெரியாறு அணை உபரி நீரை குள்ளப்பகவுண்டன்பட்டி அருகே தடுப்பணை அமைத்து குழாய் மூலம் கொண்டு வந்து ஆண்டிபட்டி பகுதி கண்மாய்களில் தேக்கும் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X