கோவையில் தொடர் மழை:அணைகள் நீர்மட்டம் உயர்வு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில், நீர்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.கோவை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்படுவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சோலையாறு அணை நீர்மட்டம் 165 அடி; தற்போது, 163.24 அடியாக உள்ளது. வினாடிக்கு, 4,513 கன அடி

கோவை:கோவை மாவட்டத்தில், நீர்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.கோவை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்படுவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சோலையாறு அணை நீர்மட்டம் 165 அடி; தற்போது, 163.24 அடியாக உள்ளது. வினாடிக்கு, 4,513 கன அடி தண்ணீர் வருகிறது; 3,891 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பரம்பிக்குளம் அணை நீர்மட்டம், 72 அடி; தற்போதைய நீர்மட்டம், 68.58 அடியாக உள்ளது. வினாடிக்கு, 7,049 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது; அணையில் இருந்து, 6,319 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.ஆழியாறு அணை நீர்மட்டம், 120 அடி; தற்போது, 117.60 அடியாக நீர் மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 2,180 கன அடி தண்ணீர் வருகிறது; 275 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானி சாகர் அணை நீர்மட்டம், 105 அடி. தற்போதைய நீர்மட்டம், 101.50 அடியாக உள்ளது. வினாடிக்கு, 2,468 கன அடி தண்ணீர் வருகிறது; அணையில் இருந்து, 512 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.மேலும், நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது மேட்டுப்பாளையம் - 41.50 மி.மீ., சின்னக்கல்லாறு - 142 மி.மீ., சின்கோனா - 70, வால்பாறை பி.ஏ.பி., - 122, வால்பாறை தாலுகா - 121, சோலையாறு - 86, பொள்ளாச்சி - 6, ஆழியாறு - 42 மி.மீ.,

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X