சில வரி செய்திகள்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
இந்திய கம்யூ., கூட்டம்மதுக்கரை ஒன்றிய இ.கம்யூ., கட்சி குழு கூட்டம், திருமூர்த்தி தலைமையில் நடந்தது. உறுப்பினர் அட்டையை, கமிட்டி செயலாளர் இளங்கோ வழங்கினார். திருப்பூரில் நடக்க உள்ள மாநில, 25வது மாநாடு, பேரணியில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினர் தந்தசாமி, தங்கராஜ், ராஜமாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர். வளர்ச்சி பணிகளுக்கு

இந்திய கம்யூ., கூட்டம்

மதுக்கரை ஒன்றிய இ.கம்யூ., கட்சி குழு கூட்டம், திருமூர்த்தி தலைமையில் நடந்தது. உறுப்பினர் அட்டையை, கமிட்டி செயலாளர் இளங்கோ வழங்கினார். திருப்பூரில் நடக்க உள்ள மாநில, 25வது மாநாடு, பேரணியில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினர் தந்தசாமி, தங்கராஜ், ராஜமாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை
தொண்டாமுத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட, தென்னமநல்லுார், தேவராயபுரம், வெள்ளிமலைபட்டினம், ஜாகிர்நாயக்கன்பாளையம், இக்கரை போளுவாம்பட்டி, மத்துவராயபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது; முன்னாள் அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார்.எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும், 15வது நிதி குழு மானிய திட்டத்தில், 48 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் பைப் லைன் விஸ்தரிப்பு, சாலை அமைத்தல், சாக்கடை கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பூஜையிடப்பட்டது. தொண்டாமுத்தூர் ஒன்றிய தலைவி மதுமதி, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

'சுஸ்வாகதம் - 2022'
பி.பி.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில், 'சுஸ்வாகதம்-2022' முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது; கல்லுாரி முதல்வர் முத்துமணி வரவேற்றார். கல்வி குழு தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார்.கோவை நன்னெறி கழக தலைவர் சுப்ரமணியம் பேசுகையில், ''நாட்டுப்பற்றும், தெய்வீக பற்றும் தனி மனிதனுக்கு தேவை. குடும்பத்தில் தெய்வீக பற்று ஒழுக்கத்தை தரும். சமுதாயத்தில் நாட்டுப்பற்று ஒழுக்கத்தை தரும். விளையாட்டு நல்ல உடல் நலத்தை தருவதுடன், உற்சாகத்தையும் தரும். பாரம்பரிய மண்ணில் தோன்றிய விளையாட்டுக்களை விட்டு விடாமல் பாதுகாக்க வேண்டும்,'' என்றார். தமிழ்த்துறை இணை பேராசிரியர் ஹரிதாஸ் நன்றி கூறினார். மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அரசு தொழிற்பயிற்சி நிலைய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம், 7ம் தேதி காலை, 9:30 மணிக்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடக்கிறது. ஐ.டி.ஐ., முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து நிலைய மேம்பாட்டு பணிகளில் ஈடுபாடு கொள்ளச் செய்யும் நோக்கிலும், பயிற்சியாளர்களின் நலன் சார்ந்த பணிகளை பற்றி ஆலோசிக்கவும் இக்கூட்டம் நடக்க உள்ளதாக, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்தார்.

வேளாண் வளர்ச்சி கூட்டம்
வேளாண் துறை சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கூட்டம், விராலியூரில் நடந்தது. தொண்டாமுத்துார் வட்டார வேளாண் அலுவலர் முகமது தாரிக் வரவேற்றார். வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் ஷீலா பூஷலட்சுமி தலைமை வகித்தார். தரிசு நிலங்களை மேம்படுத்துவது குறித்து, வேளாண் துறை துணை இயக்குனர் ஷபி அகமது பேசினார். உரம் பயன்பாடு, டி.ஏ.பி., உரத்துக்கு பதிலாக, மாற்று உரம் பயன்படுத்துவது குறித்து வேளாண் உதவி இயக்குனர் புனிதா விளக்கினார்.

வர்த்தகர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் தென்னம்பாளையம் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சங்க அலுவலகத்தில், துணை தலைவர் பரமசிவமூர்த்தி தலைமையில் நடந்தது.பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை ஒழிக்க, சங்கம் மூலமாக மக்கும் பைகளை மளிகை கடைகள் வாயிலாக, மக்கள் எளிதாக வாங்கும் விலையில் கிடைக்கச்செய்வது; சங்க வளர்ச்சிக்காக சிறுசேமிப்பு திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், தலைமை கமிட்டி தலைவர் முத்துப்பாண்டி, பொருளாளர் சாமுவேல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அம்மன் கோவில் விழா
கோவைபுதுார் அடுத்த அறிவொளி நகர், விவேகானந்தர் சதுக்கத்தில் வேட்டைக்கார அம்மன் கோவில் உள்ளது. இதன், 23ம் ஆண்டு விழா கம்பம் நடுதலுடன் துவங்கியுள்ளது; 8ம் தேதி வரை சிறப்பு பூஜை, கம்பம் சுற்றி ஆடுதல் நடக்கின்றன. 9ல் கரகம் எடுத்தல், 10ல் சிறப்பு பூஜை, அன்னதானம், 11ல் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

வீராங்கனைக்கு விருது
குனியமுத்துார் அருகே உள்ள சண்முக பண்ணாடி வீதியை சேர்ந்த ராமையன் மகள் மாலினி; சிலம்பம் கற்றுத் தருகிறார். இவர், கடந்த மாதம் தாய்லாந்தில் நடந்த தெற்காசிய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்று, தங்கம் வென்றார்.நாடு திரும்பிய இவருக்கு, இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத், கட்சி சார்பில் விருது வழங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சச்சின் பாலா, அமைப்பாளர் உமாசங்கர், நகர தலைவர் சின்னதம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X