வினியோகமோ 15 நாளுக்கு ஒருமுறை...வீணாவதற்கோ வீதியெங்கும் பல வழிகள்!

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பகலிலும் 'பளிச்'திருப்பூர் சந்திராபுரம், இந்திராநகர் பகுதியில் தொடர்ந்து பகலிலும் தெருவிளக்கு எரிகிறது. விளக்கை சரியான நேரத்துக்கு அணைத்து மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டும்.- முத்துக்குமார்,இந்திராநகர். வீதி நிறைய குப்பைதிருப்பூர், காதர்பேட்டை, மஜீத் வீதியில் குப்பை நிறைந்து காணப்படுகிறது. குப்பைகளை அள்ளிச் செல்வதுடன், குப்பை தொட்டி வைக்க வேண்டும்.-
வினியோகமோ 15 நாளுக்கு ஒருமுறை...வீணாவதற்கோ வீதியெங்கும் பல வழிகள்!

பகலிலும் 'பளிச்'

திருப்பூர் சந்திராபுரம், இந்திராநகர் பகுதியில் தொடர்ந்து பகலிலும் தெருவிளக்கு எரிகிறது. விளக்கை சரியான நேரத்துக்கு அணைத்து மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டும்.- முத்துக்குமார்,இந்திராநகர். வீதி நிறைய குப்பைதிருப்பூர், காதர்பேட்டை, மஜீத் வீதியில் குப்பை நிறைந்து காணப்படுகிறது. குப்பைகளை அள்ளிச் செல்வதுடன், குப்பை தொட்டி வைக்க வேண்டும்.- வின்சென்ட்ராஜ், காதர்பேட்டை. வீணாகும் குடிநீர்திருப்பூர் ரங்கநாதபுரம் - கொங்கு மெயின் ரோடு, நான்காவது வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- மோகன்குமார், ரங்கநாதபுரம்.ஒளிராத விளக்குதிருப்பூர் வளம் பாலம் சந்திப்பு, மின் மயான ரவுண்டானாவில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி புது விளக்கு அமைக்க வேண்டும்.- சங்கர், டூம்லைட் மைதானம்.நாய்த்தொல்லைஅவிநாசி - மங்கலம் ரோடு, பெரியகருணைபாளையம், கீரின்பில்ட் பகுதியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.- ராம்குமார், பெரியகருணைபாளையம்.குடிநீருக்கு சிக்கல்காரணம்பேட்டை, கோடங்கிபாளையத்தில், 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது. வீதியில் பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சரிசெய்ய வேண்டும்.- சங்கர் சதீஷ், கோடங்கிபாளையம். குண்டும் குழியுமான ரோடுதிருப்பர் பிரிட்ஜ்வே காலனி எக்ஸ்டென்ஷன், ஏ.கே.ஆர்., அகாடமி ஸ்கூல் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.- கலைமணி, பிரிட்ஜ்வேகாலனி. கால்வாய் அடைப்புதிருப்பூர், ராயபுரம், ஸ்டேட் வங்கி காலனி முதல் வீதியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.- முருகன், ராயபுரம். கழிவுநீரால் துர்நாற்றம்தெக்கலுாரில் தேசிய நெடுஞ்சாலை கீழ் உள்ள சர்வீஸ் சாலையில் ஊரின் நுழைவு வாயிலில் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை அதிகமாகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.- சபரீஸ்வரன், தெக்கலுார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X