பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஆண்டிபட்டி-தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் இயங்கி வரும் 'சகி' - ஒருங்கிணைந்த சேவை மையசெயல்பாடுகள் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்தார். பொது இடங்களில் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு தேவையான இலவச உதவிகள் வழங்க 'சகி' - ஒருங்கிணைந்த சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட



ஆண்டிபட்டி-தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் இயங்கி வரும் 'சகி' - ஒருங்கிணைந்த சேவை மையசெயல்பாடுகள் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்தார். பொது இடங்களில் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு தேவையான இலவச உதவிகள் வழங்க 'சகி' - ஒருங்கிணைந்த சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவைக்கேற்ப அவசர மீட்பு, மருத்துவம், போலீஸ், சட்ட உதவிகள், உளவியல் ஆலோசனைகள், தற்காலிக தங்கும் வசதி வழங்கப்படுகிறது. வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்க 24 மணி நேரமும் ஒருங்கிணைந்த சேவை மையம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் பெண்களுக்கான இலவச உதவி எண் 181 மூலம் பெறப்படும் புகார்கள் மீதான நடவடிக்கை விவரம் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.நிகழ்ச்சியில் தேனி கலெக்டர் முரளிதரன், எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன், சேவை மைய ஒருங்கிணைப்பாளர் ஜனனி உட்பட பலர் உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X