எங்கு நோக்கினும், இனி பசுமைப்போர்வை! 3 மாதத்தில் 53 ஆயிரம் மரக்கன்று நடவு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் 8ல், கடந்த மூன்று மாதங்களில் மாவட்டம் முழுவதும் 53 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.பின்னலாடை உற்பத்தியில் உலக அரங்கில் புகழ் பெற்றுள்ளது திருப்பூர். ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடிக்கு மேல் உள்நாட்டு ஆடை வர்த்தகம்; 30 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது. பெருகி வரும் தொழிற்சாலை, மக்கள் தொகை, வாகன போக்குவரத்து
எங்கு நோக்கினும், இனி பசுமைப்போர்வை! 3 மாதத்தில் 53 ஆயிரம் மரக்கன்று நடவு

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் 8ல், கடந்த மூன்று மாதங்களில் மாவட்டம் முழுவதும் 53 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.பின்னலாடை உற்பத்தியில் உலக அரங்கில் புகழ் பெற்றுள்ளது திருப்பூர். ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடிக்கு மேல் உள்நாட்டு ஆடை வர்த்தகம்; 30 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது. பெருகி வரும் தொழிற்சாலை, மக்கள் தொகை, வாகன போக்குவரத்து அதிகரிப்பால், வந்தோரை வாழவைக்கும் நகரின் இயற்கைச் சூழியல் பாதிக்கப்பட்டது. பசுமை பாதுகாப்புடன் கூடிய தொழில் வளர்ச்சிதான் நிலையான ஆரோக்கியம் தரும்.இதை உணர்ந்து, திருப்பூரை பசுமைமிகு மாவட்டமாக மாற்றும் லட்சியத்துடன், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தை வெற்றி அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இயற்கையை பாதுகாக்கும் இந்த பசுமை வேள்வியில், இயற்கை ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கானோர் கரம்கோர்த்துள்ளனர்.மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள பொது இடம், கோவில், விவசாய காலியிடங்களில் வனத்துக்குள் திருப்பூர் திட்டம் மூலம், பலன்தரும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், ஏழு திட்டங்கள் மூலம், இதுவரை, மொத்தம் 13 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.மரக்கன்றுகள் விருட்சமாகி, திருப்பூருக்கு பசுமை போர்வையை போர்த்தி வருகின்றன. வாகன இரைச்சலும், பின்னலாடை இயந்திரங்களின் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த திருப்பூரில், பறவைகளின் 'கீச்' ஒலிகள் கேட்கத்துவங்கியுள்ளன.இந்நிலையில், 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்குடன், கடந்த ஏப்ரல் மாத இறுதியில், 'வனத்துக்குள் திருப்பூர் -- 8' திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் நேற்று மூன்று இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.சாமளாபுரம் குளக்கரை பகுதியில், 600 மரக்கன்றுகள் நடப்பட்டன. புங்கன் 150; மந்தாரை, 150; பூவரசு 150; மலை வேம்பு 150 நடப்பட்டுள்ளது.முருகம்பாளையம் சார்ப் யார்ன் பிராசஸ் நிறுவனம் மற்றும் சுண்ட மேடு ஆரம்ப சுகாதார மையத்தில், 140 மரக்கன்றுகள் நடப்பட்டன. வனத்துக்குள் திருப்பூர் திட்டம் 8 துவக்கப்பட்டு மூன்றே மாதங்களில், மாவட்டம் முழுவதும் 53 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X