மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகக் கூட்டம்

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | |
Advertisement
மதுரை -மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (எஸ்.எல்.சி.எஸ்.,) முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகக் கூட்டம் முதல்வர் சுஜாதா தலைமையில் நடந்தது. டீன் பிரியா வரவேற்றார். ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் துணைமுதல்வர் அர்ச்சுனன் பேசினார். கல்லுாரியின் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், தேர்வு முறைகள், உட்கட்டமைப்புகள் குறித்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை -மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (எஸ்.எல்.சி.எஸ்.,) முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகக் கூட்டம் முதல்வர் சுஜாதா தலைமையில் நடந்தது. டீன் பிரியா வரவேற்றார்.



latest tamil news


ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் துணைமுதல்வர் அர்ச்சுனன் பேசினார். கல்லுாரியின் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், தேர்வு முறைகள், உட்கட்டமைப்புகள் குறித்து பேராசிரியை சுகந்தி ஹெப்சிபா விளக்கினார்.


latest tamil news



சிறப்பு அழைப்பாளர்களான சென்னை டி.சி.எஸ்., தலைமை அலுவலர் பாபுராஜன், ஆடிட்டர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், "மாணவர்கள் வெற்றியை நோக்கி செல்ல தொழில்நுட்ப அறிவு, மொழித்திறன், நேர்த்தியான பழக்க வழக்கம் உள்ளவர்களாக விளங்க வேண்டும். தோல்விகள் வரும் போது அவற்றை எதிர்கொண்டு வீழ்த்தும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்றனர்.ஒருங்கிணைப்பாளர்கள் ஆபிரகாம் பிரதீப், கிஷோர்குமார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். தமிழ்த்துறைத் தலைவர் செல்வி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X