மூதாட்டியிடம் செயின் பறிப்பு:வாலிபர்களுக்கு போலீஸ் வலை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கோவை;கோவைபுதுார், நேதாஜி நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் உத்தரியம்; அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அல்போன்ஸ் ரீட்டா, 64 நேற்று முன்தினம் மாலை, 6:15 மணிக்கு குழந்தை இயேசு சர்ச் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அலமுது நகர் கங்கா சூப்பர் மார்க்கெட் அருகே சென்றபோது, பின்தொடர்ந்து பைக்கில் இருவர் வந்தனர். அவர்களில் ஒருவன், அல்போன்ஸ்

கோவை;கோவைபுதுார், நேதாஜி நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் உத்தரியம்; அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அல்போன்ஸ் ரீட்டா, 64 நேற்று முன்தினம் மாலை, 6:15 மணிக்கு குழந்தை இயேசு சர்ச் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அலமுது நகர் கங்கா சூப்பர் மார்க்கெட் அருகே சென்றபோது, பின்தொடர்ந்து பைக்கில் இருவர் வந்தனர். அவர்களில் ஒருவன், அல்போன்ஸ் ரீட்டா அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பிடித்து இழுத்தான்.அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததும், சங்கிலியை பறித்துக் கொண்டு இருவரும் தப்பினர். பறிபோன, 4.5 பவுன் தங்கச்சங்கிலி மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய். கீழே விழுந்து காயமுற்ற அல்போன்ஸ் ரீட்டாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.அப்பகுதியில் இருக்கும் 'சிசி - டிவி' கேமராக்களில், குற்றவாளிகள் பைக்கில் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்து, விசாரணை நடத்தப்படுகிறது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X