ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 2 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கோவை:சுவாசப்பிரச்னையால் அவதிப்பட்ட இரண்டு மாத குழந்தைக்கு, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அரிதான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.குழந்தை இதய அறுவை சிகிச்சை நிபுணர் விஜய் சதாசிவம் கூறியதாவது:சுவாசப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட இரண்டு மாத குழந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. எக்கோ கார்டியோகிராம் பரிசோதனையில், வலது ஏட்ரியத்தில் ஒரு காயம் மற்றும் இதயத்தை

கோவை:சுவாசப்பிரச்னையால் அவதிப்பட்ட இரண்டு மாத குழந்தைக்கு, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அரிதான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.குழந்தை இதய அறுவை சிகிச்சை நிபுணர் விஜய் சதாசிவம் கூறியதாவது:சுவாசப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட இரண்டு மாத குழந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. எக்கோ கார்டியோகிராம் பரிசோதனையில், வலது ஏட்ரியத்தில் ஒரு காயம் மற்றும் இதயத்தை சுற்றி திரவம் இருப்பது தெரிந்தது.ரத்த ஓட்டத்துக்கு மிக குறுகிய இடம் மட்டுமே இருந்ததால், உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனடியாக, மயக்க மருந்து நிபுணர் நரேந்திரமேனன் உள்ளிட்ட மருத்துவ குழுவினருடன் அதற்கான பணியை துவக்கி, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது; அக்குழந்தை குணமடைந்து வருகிறது. அகற்றப்பட்ட கட்டி, 'கேபிலரி ெஹமாஞ்சியோமா' என, நோயியல் பகுப்பாய்வில் தெரியவந்தது. இவ்வகையான கட்டிகள் அரிதானவை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X