மதுரை-மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் 1181 பள்ளி மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக். 8 ம் தேதி வரை கல்லுாரி மாணவர்கள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்.
மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு 31, மாணவியருக்கு 14 என மொத்தம் 45 விடுதிகள், கல்லுாரி மாணவர்களுக்கு 5, மாணவியருக்கு 6 என 11 விடுதிகள், ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு 1 விடுதி என மொத்தம் 57 விடுதிகள் உள்ளன. இவ்விடுதிகளில் 85 சதவீதம் ஆதிதிராவிடர், மலைஜாதியினர், 10 சதவீதம் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் பிரிவினர், 5 சதவீதம் பொதுப் பிரிவினர் சேர்க்கப்படுவர்.இவ்விடுதிகளில் பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை சமீபத்தில் நடந்தது. ஆன்லைனில் விண்ணப்பித்த இம்மாணவர்களின் மனுக்கள் 2 நாட்கள் பரிசீலிக்கப்பட்டன.
கலெக்டர் அனீஷ்சேகர், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கோட்டூர்சாமி உட்பட அதிகாரிகள் தகுதியுள்ள 1181 பேரை தேர்வு செய்தனர்.கல்லுாரி மாணவர்கள் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இம்மாணவர்கள் அக்.10 வரை விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக, 3 கி.மீ., தொலைவுக்கு அப்பால் வீடு உள்ள மாணவர்கள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம். www.tnadw-hms.in/application என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.