'அரும்புகள்... மலர்களாக' பூக்கணும்! சிறப்பான திட்டத்தை இன்னும் செதுக்கணும்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கோவை:தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, எண்ணும் எழுத்தும் திட்டத்தை, வகுப்பறையில் செயல்படுத்துவதில் உள்ள சந்தேகங்களுக்கு, யாரை அணுகி விளக்கம் பெறுவது என தெரியாமல், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.துவக்க வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, மாநில கல்வியியல் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனத்துடன், கல்வியாளர்கள் சிலர் இணைந்து, எண்ணும் எழுத்தும்
'அரும்புகள்... மலர்களாக' பூக்கணும்!   சிறப்பான திட்டத்தை இன்னும் செதுக்கணும்

கோவை:தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, எண்ணும் எழுத்தும் திட்டத்தை, வகுப்பறையில் செயல்படுத்துவதில் உள்ள சந்தேகங்களுக்கு, யாரை அணுகி விளக்கம் பெறுவது என தெரியாமல், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.துவக்க வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, மாநில கல்வியியல் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனத்துடன், கல்வியாளர்கள் சிலர் இணைந்து, எண்ணும் எழுத்தும் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். நெதர்லாந்து நாட்டின் துவக்க கல்வி மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, இத்திட்டத்துக்கான 'சிலபஸ்' உருவாக்கப்பட்டுள்ளது.இதில், தமிழ், ஆங்கிலம், கணிதப்பாடத்திற்கு, அதிக முக்கியத்துவம் அளித்து, வாரந்தோறும் வகுப்பறையில் நடத்த வேண்டிய பாடங்கள், மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணைந்து, மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளன.அரும்பு, மொட்டு, மலர் என மூன்றாக மாணவர்களின் கற்றல் திறன் பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளையும் மாணவர்கள் அடைய, ஆசிரியர்கள் மெனக்கெட வேண்டும். இப்புதிய நடைமுறை மூலம், நான்காம் வகுப்புக்கு செல்லும் ஒரு மாணவரால், அடிப்படை கணித வினாக்களுக்கு தீர்வளித்தல், எழுதுதல், வாசித்தல் திறனை பெற முடியும். இத்திட்டம், 2025 வரை நடைமுறையில் இருக்கும் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.சிறப்பான இத்திட்டத்தை வகுப்பறையில் செயல்படுத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வகுப்பறையில் தோன்றும் சந்தேகங்களுக்கு, ஆசிரியர்கள் யாரை அணுகுவது என தெரியாமல் விழி பிதுங்கியுள்ளனர். இரண்டாம் பருவத்துக்கு 'சிலபஸ்' வெளியிடும் முன், ஆங்காங்கே தோன்றும் சிறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.

சீனியர் டீச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை!

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'இளம் ஆசிரியர்களுக்கு இப்புதிய நடைமுறையை உள்வாங்கி, வகுப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்படாது. மூத்த ஆசிரியர்கள் சிலருக்கு, பல்வேறு சந்தேகங்கள் இருப்பது உண்மையே. ஆசிரியர்களுக்கு எழும் சந்தேகங்களை, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வரலாம். 'சிலபஸ்' உருவாக்கிய குழுவினரே விளக்கம் அளித்து, 'டிஜிட்டல்' வடிவில் கல்வி இணையதளத்தில் பதிவேற்றினால், பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X