ஹசாரே குழுவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் வாபஸ்

Added : செப் 07, 2011 | கருத்துகள் (18)
Share
Advertisement
ஹசாரே குழுவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் வாபஸ்

புதுடில்லி:அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்களுக்கு எதிராக கொடுத்திருந்த உரிமை மீறல் நோட்டீசை, காங்கிரஸ் எம்.பி., ஒருவர் நேற்று வாபஸ் பெற்றார். "இந்த உரிமை மீறல் நோட்டீசை, மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளவும், எம்.பி.,க்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை நியாயப்படுத்தவும் ஹசாரே ஆதரவாளர்கள் முற்பட்டுள்ளனர்' என்றும், குற்றம் சாட்டியுள்ளார்.


பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, டில்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்த போது, அந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அவரது ஆதரவாளர்களான, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவால், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் நடிகர் ஓம்புரி ஆகியோர், எம்.பி.,க்களை கடுமையாக விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, இந்த விவகாரத்தை பார்லிமென்டில் எழுப்பிய எம்.பி.,க்கள், அன்னா ஹசாரே ஆதரவாளர்களுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்தனர். குறிப்பாக, லோக்சபாவில் 10 எம்.பி.,க்கள் இதுதொடர்பாக நோட்டீஸ் கொடுத்தனர். இவர்கள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.அதே நேரத்தில், ராஜ்யசபாவிலும் இதுபோல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.


இந்த நோட்டீசின் அடிப்படையில், கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்திற்கு பதில் அளிக்க வேண்டும் எனில், "எம்.பி.,க்கள் குறித்து தாங்கள் தவறாக பேசிய விஷயங்கள் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்' என, கெஜ்ரிவாலும், கிரண் பேடியும், பார்லிமென்ட் செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.


இந்நிலையில், அன்னா ஹசாரே ஆதரவாளர்களுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மான நோட்டீசை, பரேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி., பிரவீன்சிங் ஆரோன் திரும்பப் பெற்றுள்ளார்.


இதுதொடர்பாக, லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ""கிரண் பேடி உட்பட நான்கு பேருக்கு எதிரான உரிமை மீறல் தீர்மான நோட்டீசை வாபஸ் பெறுகிறேன். உரிமை மீறல் நோட்டீஸ் மூலமாக, அவர்களை தண்டிப்பதற்கு பதிலாக, அவர்களின் உண்மையான முகத்தை மக்களுக்கு காட்ட முற்படுவேன். உரிமை மீறல் தீர்மான நோட்டீஸ் மூலம், ஹசாரே குழுவினர் மலிவான ஆதாயம் தேட முற்படுவதோடு, எம்.பி.,க்களுக்கு எதிரான தங்களின் கருத்துக்களையும் நியாயப்படுத்த முற்படுகின்றனர்' என, கூறியுள்ளார்.


அவர் மேலும் கூறியுள்ளதாவது:எம்.பி.,க்கள் குறித்து விமர்சித்ததற்காக, நடிகர் ஓம்புரி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுள்ளார். கிரண் பேடி, கெஜ்ரிவால் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர், காங்கிரசை குறிவைத்துப் பேசுவதன் மூலம் மலிவான ஆதாயம் தேட முற்பட்டுள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில், சில பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். அவர்களின் உண்மையான முகத்தை மக்களுக்கு காட்டுவேன். அவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு ஜனநாயக வழியில் பதில் அளிப்பேன்.இவ்வாறு கடிதத்தில் பிரவீன்சிங் ஆரோன் கூறியுள்ளார்.


ஏற்கனவே, இந்த உரிமை மீறல் விவகாரத்தை பெரிய அளவில் எடுத்துக் கொண்டு, ஹசாரே குழுவினர் பார்லிமென்டால் தண்டிக்கப்படுவார்களா என்ற விவாதம் நடக்கும் போது, காங்கிரஸ் எம்.பி.,யின் முடிவின் பின்னணி என்ன, என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subramanian krishnamurthy - chennai,இந்தியா
08-செப்-201115:47:25 IST Report Abuse
subramanian krishnamurthy மத்திய காங்கிரஸ் அரசின் ஊழல்கள் வரும் தேர்தலில் காங்கிரஸ் அனைத்து இடத்திலும் டெபாசிட் இழக்கும்.
Rate this:
Cancel
Deva - Sivagangai ,இந்தியா
08-செப்-201114:03:57 IST Report Abuse
Deva மலிவான அரசியல் நடத்தும் காங்கிரஸ் மத்திய அரசு உரிமைமீறல் பிரச்சனையால் மூக்குடைபடும் என்பதால் வாபஸ் பெற்றுள்ளது.
Rate this:
Cancel
Govind Govind Samy - Tirupur,இந்தியா
08-செப்-201113:11:56 IST Report Abuse
Govind Govind Samy நண்பர்களே காய்க்கின்ற மரம் கல்லடிபடும் ,நிர்வான நாட்டிலே கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பதைப்போல ஊழல் நிறைந்த இந்தியாவில் ஹசாரே போன்றவர்களை எதிர்கின்றவர்கள் அரசியல் வாதிகள் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X