உசிலம்பட்டிக்கு உபரிநீர் கொடுங்க: விவசாயிகள் கோரிக்கை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மதுரை-வைகை அணையின் உபரிநீரை உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்ட கண்மாய்களுக்கு திறக்ககோரி மதுரை மாவட்ட நன்செய், புன்செய் விவசாய சங்கத்தினர் கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வனிடம் கோரிக்கை வைத்தனர்.சங்கத் தலைவர் மணிகண்டன் கூறியதாவது: வைகை அணை நீர் மட்டம் 70 அடியாக உள்ளது. (மொத்த உயரம் 71 அடி). அணைக்கு வரும் தண்ணீர்அப்படியே ஆற்றின்


மதுரை-வைகை அணையின் உபரிநீரை உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்ட கண்மாய்களுக்கு திறக்ககோரி மதுரை மாவட்ட நன்செய், புன்செய் விவசாய சங்கத்தினர் கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வனிடம் கோரிக்கை வைத்தனர்.சங்கத் தலைவர் மணிகண்டன் கூறியதாவது: வைகை அணை நீர் மட்டம் 70 அடியாக உள்ளது. (மொத்த உயரம் 71 அடி). அணைக்கு வரும் தண்ணீர்அப்படியே ஆற்றின் வழியாக திறந்து விடப்படுகிறது. அணைக்கு பெரியாறு, வருஷநாடு மூல வைகை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, தேனி முல்லை ஆற்று தண்ணீரும் வைகைக்கு வருகிறது.உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டத்தின் கீழ் நிலக்கோட்டை, உசிலம்பட்டி தாலுகாவில் 35 கண்மாய்கள் பயன்பெறும். தற்போது திறந்து விடப்படும் உபரிநீரில் இருந்து 15 நாட்களுக்கு தினமும் 100 கனஅடி கேட்டுள்ளோம். கடந்தஆண்டை போல இந்தாண்டும் தந்தால் கால்நடைகளுக்கும் எங்களுக்கும் குடிநீர் கிடைக்கும். சடைச்சிபட்டி கண்மாய்க்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. இப்போது கொடுக்கும் நீரில் சடைச்சிபட்டி கண்மாய்க்கு தரலாம்.வைகை அணையில் 67 அடி தண்ணீர் இருந்தாலே நேரடியாக 27 கி.மீ., நீள வாய்க்கால் வழியாக எங்களுக்கு தண்ணீர் திறந்து விடலாம். கலெக்டரிடம் கோரிக்கை வைத்த போது தண்ணீர் திறப்பதாக உறுதியளித்தார் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X