மதுரை ஆதின குருபூஜை விழா

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மதுரை----மதுரை ஆதினம் அருணகிரிநாதர் சமாதி நிலை அடைந்து ஓராண்டு ஆகிறது. இதை நினைவுகூரும் வகையில் நேற்று அவரது சமாதியில் குருபூஜை நடந்தது.இதையொட்டி காலை ஆதினமடத்தில் சொக்கநாதர் வழிபாடு நடந்தது. பின்னர் சமாதியில் சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. மாலையில் நடந்த நிகழ்ச்சியில் பழநி சண்முகசுந்தர தேசிகருக்கு திருஞானசம்பந்தர் விருது, 'தமிழாகரன்' விருது, தருமை ஆதின



மதுரை----மதுரை ஆதினம் அருணகிரிநாதர் சமாதி நிலை அடைந்து ஓராண்டு ஆகிறது. இதை நினைவுகூரும் வகையில் நேற்று அவரது சமாதியில் குருபூஜை நடந்தது.இதையொட்டி காலை ஆதினமடத்தில் சொக்கநாதர் வழிபாடு நடந்தது. பின்னர் சமாதியில் சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. மாலையில் நடந்த நிகழ்ச்சியில் பழநி சண்முகசுந்தர தேசிகருக்கு திருஞானசம்பந்தர் விருது, 'தமிழாகரன்' விருது, தருமை ஆதின புலவர் குருசாமி தேசிகருக்கு வழங்கப்பட்டது. விருதுகளை மதுரை ஆதினம் ஹரிகரஞானசம்பந்தர் வழங்கினார். குருசாமி தேசிகருக்குப் பதில் அவரது பேரன் சண்முகநாதன் விருதை பெற்றார். இந்நிகழ்ச்சியில் தருமை ஆதின தென்மண்டல கட்டளைதாரர் ஞானசம்பந்த தம்பிரான் சுவாமி, தமிழாகரன் இதழாசிரியர் எழில்பரமகுரு பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X