போலீஸ் செய்திகள்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கார் மோதி ஒருவர் பலிதிருமங்கலம்: தனக்கன்குளம் பர்மா காலனி சிவராஜ் 60. ஆஸ்டின்பட்டி தனியார் இல்ல பொறுப்பாளர். நேற்று முன்தினம் மதியம் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) திருமங்கலம் - சமயநல்லுார் நான்கு வழிச்சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார் மோதி இறந்தார். மதுரை பொன்னகரம் டிரைவர் நிதின்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பிக்பாக்கெட் வாலிபர்

கார் மோதி ஒருவர் பலி

திருமங்கலம்: தனக்கன்குளம் பர்மா காலனி சிவராஜ் 60. ஆஸ்டின்பட்டி தனியார் இல்ல பொறுப்பாளர். நேற்று முன்தினம் மதியம் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) திருமங்கலம் - சமயநல்லுார் நான்கு வழிச்சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார் மோதி இறந்தார். மதுரை பொன்னகரம் டிரைவர் நிதின்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பிக்பாக்கெட் வாலிபர் கைதுதிருமங்கலம்: கிழவனேரி ஜெயலட்சுமி நேற்று திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். இவரது பையில் இருந்த அலைபேசி, ரூ.9500ஐ சிவகாசி திருத்தங்கல் ரவிக்குமார் 43, திருடியதாக கைது செய்யப்பட்டார்.கோயிலில் திருட்டுதிருமங்கலம்: ஆலம்பட்டி அங்காள ஈஸ்வரி வால குருநாதர் சுவாமி கோயிலில் கண்காணிப்பு கேமராக்களின் பதிவை பதிவு செய்யும் டி.வி.ஆர். கருவியை மர்மநபர் திருடி சென்றார். விசாரணை நடக்கிறது. ----------------டிப்பர் லாரியில் பேட்டரிகள் திருட்டுதிருமங்கலம்: எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரிகளில் இருந்து ஆறு பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.இயந்திரத்தில் சேலை சிக்கி பெண் பலிஅவனியாபுரம்: திருப்புவனம் ஈச்சனேரி சுகப் பிரியா 27. இரு மகள்கள் உள்ளனர். கணவர் பிரிந்த நிலையில் அண்ணன், பெற்றோர் பராமரிப்பில் வசித்தார். அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் சந்தோஷ் நகர் குளோப் கிச்சன் வேர் கம்பெனியில் 5 ஆண்டுகளாக வேலை செய்தார். நேற்று முன்தினம் இயந்திரத்தில் சேலை மாட்டி முதுகில் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்தார். உரிமையாளர் அப்துல் மஜீத், மேற்பார்வையாளர் மீரா மைதீன் மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மாயமானவர் சடலமாக மீட்புசோழவந்தான்: முள்ளிப்பள்ளம் வைகை ஆற்று தடுப்பணையில் மிதந்த ஆண் உடலை தீயணைப்பு அலுவலர் பசும்பொன் தலைமையில் வீரர்கள் மீட்டனர். காடுபட்டி போலீசார் விசாரித்ததில் மன்னாடிமங்கலம் வெங்கலமுடையான் மகன் ஆனந்த் 30, எனத் தெரிந்தது. மதுரையில் கூரியர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துள்ளார். ஜூலை 28ல் வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X