பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அரசு ஒருபோதும் அடிபணியாது

Updated : செப் 08, 2011 | Added : செப் 07, 2011 | கருத்துகள் (83)
Share
Advertisement
புதுடில்லி:"நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் சீர்குலைப்பதே டில்லி குண்டு வெடிப்பின் நோக்கம். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அரசு ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை இனம் கண்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த எல்லாவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்' என, மத்திய அரசு தெரிவித்தது. டில்லி ஐகோர்ட்டில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததால்,
Terror threat, Indian Government, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்,

புதுடில்லி:"நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் சீர்குலைப்பதே டில்லி குண்டு வெடிப்பின் நோக்கம். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அரசு ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை இனம் கண்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த எல்லாவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்' என, மத்திய அரசு தெரிவித்தது.


டில்லி ஐகோர்ட்டில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததால், காலையில் இருந்தே டில்லியை பதட்டம் தொற்றிக் கொண்டது.


லோக்சபா நேற்று காலை கூடியதும், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி எழுந்து, "" மிகவும் துக்ககரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. டில்லி ஐகோர்ட்டில் குண்டுவெடித்து பலர் உயிரிழந்து விட்டனர். பார்லிமென்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நடந்துள்ள சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சர் அறிக்கை அளிக்க வேண்டும். எனவே, கேள்விநேரத்தை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.


இதையடுத்து பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், ""எனக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. முக்கால்மணி நேரத்திற்கு முன்னர்தான் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.


உடன் பார்லிமென்ட் விவகார அமைச்சர் பன்சால் எழுந்து,""பகல் 12.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்றார். இதையடுத்து, சபை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.


சபை மீண்டும் கூடியதும், அமைச்சர் சிதம்பரம் அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது: இன்று காலை 10.14 மணிக்கு, டில்லி ஐகோர்ட்டின் நான்காவது மற்றும் ஐந்தாவது நுழைவாயில்களுக்கு இடையில் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. அங்கிருக்கும் வரவேற்பு அறையின் அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது. கோர்ட்டுக்குள் போவோருக்கு நுழைவுச்சீட்டு அளிக்கப்படும் வரவேற்பு அறைக்கு வெளியில் உள்ள கார் பார்க்கிங் இடத்தில் குண்டு வெடித்துள்ளது. சூட்கேசில் வைத்திருந்த குண்டு வெடித்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.இதுவரை கிடைத்துள்ள தகவல்படி, 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர்; 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த பலரும், ஆர்.எம்.எல்., மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தவிர, எய்ம்ஸ் மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளிலும் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு, ஐகோர்ட்டில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் நடந்ததும், உடனடியாக அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் 20 நிமிடங்களுக்குள் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.மத்திய தடயவியல் நிபுணர் குழு உடனடியாக விரைந்து சென்று தடயங்களை சேகரித்தது. தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு உடனே சென்று விட்டனர். தேசிய கமாண்டோ படையினரும் அங்கு சென்று விசாரணையை துவக்கினர். டில்லி போலீசாரும் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது இருக்கும் இந்த சூழ்நிலையில், இன்றைய குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான குழு எது என்பது குறித்து உடனடியாக இனம் காண்பது சாத்தியம் இல்லாதது. கடந்த சில ஆண்டுகளாகவே, டில்லி போலீசின் தரத்தையும், எண்ணிக்கையையும் மேம்படுத்த, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டே வருகின்றன. உச்சகட்ட எச்சரிக்கை உள்ளிட்ட அனைத்து விதங்களிலும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தும், இன்றைக்கு இதுபோன்ற சோகமான சம்பவம் நடந்துவிட்டது.


நாட்டின் அமைதியையும், ஒருமைப்பாட்டையும், ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்க வேண்டுமென்பதே பயங்கரவாதிகளின் நோக்கமாக உள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை எந்த காரணத்திற்காகவும் நியாயப்படுத்தி விடவே முடியாது. இன்றைய குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு, அரசு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தின் ஒட்டுமொத்த விசாரணை நடவடிக்கைகளும் தேசிய புலனாய்வு அமைப்பின் வசம் ஒப்படைக்கப்படும்.
சம்பவத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை அரசு தெரிவிக்கிறது. காயமடைந்த ஒவ்வொருவருக்கும் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சைகளை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்த இக்கட்டான நேரத்தில், நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும்.


பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அரசு ஒருபோதும் பணிந்துவிடாது. நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உறுதியுடன், பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடித்துக் காட்ட வேண்டும். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை இனம் கண்டு, அவர்களை, சட்டத்தின் முன் நிறுத்த எல்லாவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு சிதம்பரம் பேசினார்.


"அமெரிக்காவைப்போல நடவடிக்கை தேவை' : ""இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின், அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறவில்லை. கடுமையான நடவடிக்கைகளே இதற்கு காரணம். அதேபோல, இந்தியாவிலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,'' என, அத்வானி கூறினார்.


லோக்சபாவில் நேற்று சிதம்பரத்தின் அறிக்கைக்கு பிறகு அத்வானி பேசுகையில்," இப்போதுள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தின் மீது குறை சொல்ல விரும்பவில்லை. ஒன்று மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அந்த சம்பவத்திற்கு பின், அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கவில்லை. அந்தளவுக்கு அந்நாட்டு அரசு நடவடிக்கைகள் எடுத்தது. இங்கு நாமும் அதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.


நமது டில்லி நிருபர்


Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gren Valley - madurai,இந்தியா
09-செப்-201100:59:39 IST Report Abuse
Gren Valley நீ எப்படியா கவலைப்படுவே! சாவறது அப்பாவி ஜனங்கதானே !இதே உன்வூட்டுகாரன்களா இருந்திருந்தா ...டுக்குல நெருப்பு வச்சமாதிரி ஓடியிருப்ப!காங்கிரஸ்காரனுங்க எப்போ ஒழியரானுன்களோ அப்பத்தான் இந்த நாடு வெளங்கும்!
Rate this:
Cancel
Ram - Coimbatore,இந்தியா
08-செப்-201122:25:40 IST Report Abuse
Ram எதற்கு அடிபணிய வேண்டும்? அவர்களை பிடித்து தினமும் சிக்கன் பிரியாணி போடுவோம். இல்லையென்றால் எம்பி ஆக்கி விடுவோம். ஆனால் ஒரு போதும் பயப்பட மாட்டோம். அதற்க்கு நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், பொறுமையாக இருக்க வேண்டும், நாங்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும். In a democracy, people get what they deserve. கடவுள் கூட நம்மை காப்பாற்ற யோசிப்பார் போலிருக்கு.
Rate this:
Cancel
Abdul Quddus - fahaheel,குவைத்
08-செப்-201122:24:36 IST Report Abuse
Abdul Quddus உண்மையில் இப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது.மலேகான்.அஜ்மீர் தர்கா.டெல்லி சும்மா மசூதி ஆகிய இடங்களில் குண்டு வைத்த இந்து தீவிரவாதிகள் இஸ்லாமிய அமைப்புகள்.மற்றும் முஸ்லிம் பெயர்களைத்தான் பயன் படுத்தினார்கள்.மலேகான் குண்டுவெடிப்பு நடத்திய இந்துதீவிரவாதிகள் ஒட்டு தாடி தொப்பி ஆகியவைகளை பயன் படுத்தியது அவர்களுடைய இடங்களை சோதனை இடும்போது தெரிய வந்தது மறந்திருக்காது.அதுபோல்தான் ராஜீவ் கொலையாளிகள் மூன்று பேருக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டதையடுத்து அப்சல் குருவின் மரண தண்டனையை ரத்து செய்யவேண்டுமென காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர முயற்சி நடைபெறுகிறது. இதில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இந்து தீவிரவாதிகள் ஹர்கத் அல் ஜிஹாதி என்ற பெயரில் இந்த குண்டுவெடிப்பை நடத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.இது இஸ்மாயீல் என்று கையில் பச்சை குத்திக்கொண்டு காந்தியை கொலைசெய்த கோட்சே வின் வழியை பின்பற்றி முஸ்லிம்களின் மீது பழி சுமத்துவது வழக்கமாக இருந்துவருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X