மாணவிகள் குழுவுக்கு அமைச்சர் பாராட்டு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
திருமங்கலம் -தினமலர் செய்தி எதிரொலியாக இஸ்ரோவின் 'ஆசாத்தி சாட்' சேட்டிலைட் வடிவமைப்பு பணியில் பங்கேற்ற திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியரை கல்வி அமைச்சர் மகேஷ் நேரில் பாராட்டினார்.75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பள்ளி மாணவிகளின் தொழில்நுட்ப பங்களிப்புடன் தயாரான இஸ்ரோ 'ஆசாத்தி சாட்' என்ற சேட்டிலைட் வடிவமைப்பு பணியில்

திருமங்கலம் -தினமலர் செய்தி எதிரொலியாக இஸ்ரோவின் 'ஆசாத்தி சாட்' சேட்டிலைட் வடிவமைப்பு பணியில் பங்கேற்ற திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியரை கல்வி அமைச்சர் மகேஷ் நேரில் பாராட்டினார்.75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பள்ளி மாணவிகளின் தொழில்நுட்ப பங்களிப்புடன் தயாரான இஸ்ரோ 'ஆசாத்தி சாட்' என்ற சேட்டிலைட் வடிவமைப்பு பணியில் இப்பள்ளியின் 10 மாணவிகள் பங்கேற்று வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.இம்மாணவிகள், ஆக.7 ல் பிரதமர் மோடி தலைமையில் ஸ்ரீஹரிகோட்டாவில் நடக்கும் சேட்டிலைட் ஏவும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.மதுரையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் மகேஷ், தினமலர் செய்தியை அறிந்ததும் திருமங்கலம் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கினார். சேட்டிலைட் வடிவமைத்த அனுபவம் குறித்து மாணவியரிடம் கேட்டறிந்தார். முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, டி.இ.ஓ., கோகிலா, பள்ளித் துணை ஆய்வாளர் கண்ணன், தலைமை ஆசிரியர் கர்ணன், ஆசிரியை சிந்தியா பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X