வரும் 8ல் ஆர்ப்பாட்டம்:விவசாயிகள் அறிவிப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பல்லடம்,:கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் அறிக்கை:கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பி.ஏ.பி., பாசன நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறோம். திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன. பி.ஏ.பி.,யில் விடுபட்ட பகுதிகளுக்கு பாசன நீரை கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்காக, ஆனைமலை- நல்லாறு திட்டத்தை

பல்லடம்,:கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் அறிக்கை:கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பி.ஏ.பி., பாசன நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறோம். திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன. பி.ஏ.பி.,யில் விடுபட்ட பகுதிகளுக்கு பாசன நீரை கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்காக, ஆனைமலை- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.இதற்காக, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு உட்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பெயர் பலகைகளை திறந்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். இருப்பினும் ஆனைமலை -நல்லாறு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஏற்கனவே பாசன நீர் தேவை இருக்க, ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல, தமிழக அரசு திட்டமிட்டு வருவதை ஏற்க இயலாது. ஒட்டுமொத்த விவசாயிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, வரும் 8ம் தேதி, பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் பாசன விவசாயிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X