பூங்காவை 'பார்' ஆக மாற்றியவர் மீது புகார்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
அவிநாசி;அவிநாசி வ.உ.சி., பூங்காவில் நேற்று மாலை, நான்கு இளைஞர்கள் மது அருந்தியபடி அமர்ந்திருந்தனர்.அங்கு வந்த பேரூராட்சி ஊழியர், அவர்களிடம் யார், எங்கிருந்து வருகிறீர்கள் என விசாரித்த போது, அந்த இளைஞர்கள், பேரூராட்சி ஊழியரை மிரட்டியுள்ளனர்.தகவலறிந்து, மற்ற பேரூராட்சி ஊழியர்கள் அங்கு செல்ல, இரண்டு இளைஞர்கள் தப்படியோடினர். மற்ற இருவரை பிடித்த பேரூராட்சி ஊழியர்களும்,

அவிநாசி;அவிநாசி வ.உ.சி., பூங்காவில் நேற்று மாலை, நான்கு இளைஞர்கள் மது அருந்தியபடி அமர்ந்திருந்தனர்.அங்கு வந்த பேரூராட்சி ஊழியர், அவர்களிடம் யார், எங்கிருந்து வருகிறீர்கள் என விசாரித்த போது, அந்த இளைஞர்கள், பேரூராட்சி ஊழியரை மிரட்டியுள்ளனர்.தகவலறிந்து, மற்ற பேரூராட்சி ஊழியர்கள் அங்கு செல்ல, இரண்டு இளைஞர்கள் தப்படியோடினர். மற்ற இருவரை பிடித்த பேரூராட்சி ஊழியர்களும், அப்பகுதி மக்களும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவிநாசி போலீசில் புகார் அளித்தனர்.விசாரணையில், இருவரும் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் என்பது, தனியார் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வருவதும், தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X