இலங்கை செல்லும் சீன கப்பல்; மத்திய அரசு கண்காணிப்பு

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி-சீனாவின் உளவு கப்பல், இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில், அடுத்த வாரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனா, மற்றொரு அண்டை நாடான இலங்கையின் அம்பன்தோட்டாவில் புதிய துறைமுகத்தை கட்டியுள்ளது. இந்நிலையில், சீன ராணுவத்தின் 'யுவான் வாங்க் - 5' என்ற உளவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-சீனாவின் உளவு கப்பல், இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில், அடுத்த வாரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


நம் அண்டை நாடான சீனா, மற்றொரு அண்டை நாடான இலங்கையின் அம்பன்தோட்டாவில் புதிய துறைமுகத்தை கட்டியுள்ளது. இந்நிலையில், சீன ராணுவத்தின் 'யுவான் வாங்க் - 5' என்ற உளவு போர்க் கப்பல், அம்பன்தோட்டாவுக்கு, ஆக., 11ல் செல்கிறது; ஆக., 17 வரை அங்கு முகாமிடும். இந்த உளவுக் கப்பல், செயற்கைக்கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும், சீனாவின் இந்த பயணம் குறித்து மத்திய அரசு சந்தேகப்படுகிறது. இந்த உளவுக் கப்பல் வாயிலாக, தென் மாநிலங்களை உளவு பார்க்க சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் நிலின் ஹெராத் கூறியுள்ளதாவது:இந்தியாவின் கவலையை புரிந்து கொள்கிறோம். ஆனால், இது ஒரு வழக்கமான பரிசோதனைக்கான பயணம் என்று சீனா கூறியுள்ளது.


latest tamil news


இதற்கு முன், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், மலேஷியா உட்பட பல நாடுகளுக்கு இதுபோன்று எங்கள் கடல்பகுதியை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளோம். அணு ஆயுதங்களுடன் கூடிய கப்பலாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, 'சீன உளவுக் கப்பல் வாயிலாக நம் நாட்டின் பல இடங்களை வேவு பார்க்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 'அதனால், சீனக் கப்பலின் பயணத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்' என, மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஆக-202210:01:15 IST Report Abuse
Pandiyan Dhyan இந்த இலங்கைக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்று அன்னையிலிருந்து நான் சொல்லிக் கொண்டிருந்தேன் பாம்புக்கு பால் ஊற்றுவது போல தான் இலங்ககைக்கு நாம் நாடு செய்தது நன்றி மறந்துவிட்டு சீனாவின் ........
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-ஆக-202205:17:30 IST Report Abuse
Kasimani Baskaran நீர் மூழ்கிக்கப்பலை பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டியதுதான். தேவையேற்ப்பட்டால் மூழ்கடிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X