இது உங்கள் இடம்: மக்களின் ஏச்சு, பேச்சுக்கு ஆளாக நேரிடும்!

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம் ரா.சேது, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டில், லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் பலர், தற்கொலை செய்து கொள்வது குறித்த செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன. அதனால், இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என, ஆளுங்கட்சியைத் தவிர, மற்ற கட்சிகளைச்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்


ரா.சேது, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'ஆன்லைன் ரம்மி' விளையாட்டில், லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் பலர், தற்கொலை செய்து கொள்வது குறித்த செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன. அதனால், இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என, ஆளுங்கட்சியைத் தவிர, மற்ற கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.latest tamil newsஅதே நேரத்தில், பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், ஆன்லைன் ரம்மி விளையாடச் சொல்லி வற்புறுத்தி, சில நிமிடங்களுக்கு ஒரு முறை, 'யு டியூப்' சேனல்கள் அனைத்திலும் தோன்றி, அடிக்கடி பிரசாரம் செய்து வருகிறார். ஆன்லைன் ரம்மியின் விளம்பரத் துாதராகவே அவர் மாறியுள்ளார். முன்னர் பத்திரிகையாளராக பணிபுரிந்தவருக்கு, தற்போது ஒரு கட்சியின் தலைவராக இருப்பவருக்கு, 'ஆன்லைன் சூதாட்டம்' தவறு என்றும், அதை பொருட்படுத்தாமல் ஆடுவோர், பணத்தையும், மன நிம்மதியையும், உயிரையும் இழப்பர் என்ற விஷயம் தெரியாதா என்ன?

தெரிந்திருந்தும் அதைச் செய்கிறார் என்றால், ஆன்லைன் ரம்மியை நடத்தும் நிறுவனங்கள் தரும் பணத்திற்கு விலை போயுள்ளார் என்றே அர்த்தம்.இந்த மாதிரியான விளம்பரங்களில் நடிப்பது முட்டாள்தனமான செயல், மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் செயல் என்பது, அவருக்கு புரியவில்லையா?


latest tamil newsஇப்படிப்பட்ட விளம்பரங்கள் வாயிலாக வரும் பணம், பாவப்பட்ட பணம் என்பதை அவர் உணர வேண்டும். சரத்குமார், ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பான தலைவர், மக்கள் நலன் விரும்பும் நடிகர் என்பது உண்மையெனில், ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரங்களில் நடிப்பதிலிருந்து, உடனடியாக விலக வேண்டும். இல்லையெனில், தமிழக மக்களின் ஏச்சு, பேச்சுக்களுக்கு அவர் ஆளாக நேரிடும்... ஜாக்கிரதை!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Padmanabhan - puduvayal,இந்தியா
05-ஆக-202220:16:53 IST Report Abuse
Padmanabhan நாட்டாமை, தீர்ப்பை மாத்தி சொல்லுங்க
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
05-ஆக-202218:16:16 IST Report Abuse
ANANDAKANNAN K ஒரு நடிகர் தனக்கு என்ன வருமானம் என்று தான் யோசிப்பார், இதில் பெரிய சின்ன நடிகர் வித்யாசம் எல்லாம் இல்லை, இதுபோல் தான் அமிதா பச்சன், விராட் கோழி போன்றோர் விளம்பர படத்தில் நடிக்கின்றனர் இவர்களுக்கும் விமரிசனம் வருகிறது ஆனால் அவர்கள் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை, அதுபோல தான் திரு.சரத்குமார் அவர்களும் இருப்பார், ஈமுக்கோழி விளம்பரத்திர்ற்கு கூட வந்தார்கள் நாம் மறந்து விட்டோம், முதலில் திமுக அதிமுக இன்று ச ம க பாருங்கள் மக்களே, எதுவாக இருந்தாலும் அனுபவிக்க வேண்டிய பதவிகளை அனுபவித்துவிட்டார், பாராளுமன்ற சட்டசபை உறுப்பினர்,நடிகர் சங்க செயலர்,தலைவர், ஒரு கட்சியின் தலைவர், அப்பறமும் பணத்தாசை விட வில்லை.
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
05-ஆக-202218:07:27 IST Report Abuse
abibabegum நாய் வித்த காசு குறைக்காது ரம்மியால் செத்த குடும்பத்தால் வந்த காசு தீட்டு கிடையாது எல்லாம் எனக்கு தெரியாது எனக்கு காசு மட்டும் தான் குறி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X