சசிகலாவுக்கு எதிரான வழக்கு விசாரணை முடித்து வைப்பு..

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை-மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கை கை விடுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித் துறை தெரிவித்தது. இதையடுத்து, அவருக்கு எதிரான வழக்கு விசாரணை முடிக்கப்பட்டது.கடந்த 1996 - 97ம் ஆண்டுக்கான செல்வ வரி கணக்கை, சசிகலா தாக்கல் செய்யவில்லை என, வருமான வரித் துறை 'நோட்டீஸ்' அனுப்பியது. அதற்கு, சசிகலா தரப்பில் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கை கை விடுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித் துறை தெரிவித்தது.



latest tamil news




இதையடுத்து, அவருக்கு எதிரான வழக்கு விசாரணை முடிக்கப்பட்டது.கடந்த 1996 - 97ம் ஆண்டுக்கான செல்வ வரி கணக்கை, சசிகலா தாக்கல் செய்யவில்லை என, வருமான வரித் துறை 'நோட்டீஸ்' அனுப்பியது. அதற்கு, சசிகலா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, 1996 - 97ல், சசிகலாவின் சொத்து மதிப்பு 4.97 கோடி ரூபாயாக தீர்மானித்த வருமான வரித் துறை, செல்வ வரியாக 10.13 லட்சம் ரூபாய் செலுத்தும்படி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், சசிகலா மனு தாக்கல் செய்தார்.மனுவை பரிசீலித்த தீர்ப்பாயம், 40 லட்சம் ரூபாய் கடன் தொகையை கணக்கீட்டில் சேர்த்து, மீண்டும் மதிப்பீடு செய்யும்படி, வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, வருமான வரித் துறை தரப்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil news



அப்போது, 1 கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என, மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை கைவிடுவதாக, வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை, நீதிபதிகள் முடித்து வைத்தனர். இதேபோல், சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு எதிராக வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையும் முடித்து வைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
05-ஆக-202210:48:05 IST Report Abuse
Muthuraj Richard பாவம் சசிகலா, அடுத்தவேளை சோத்துக்கே கஷ்டப்படும் குடும்பம், இவருக்கு போய் இவ்வளவு செல்வா வரியா???எண்டு நினைத்திருப்பார்கள் போல, அல்லது சொந்தமாக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பவர்களுக்கு தானே செல்வரி, ஊர்ப்பணத்தை சுருட்டி அடித்ததால் அது ஊர்க்கணக்கு தானே என்று நினைத்து தள்ளுபடி செய்து இருக்கலாம், வரி பிடுங்களால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் ஊழியர்களுக்கு இந்த அரசுகள் ஒன்றும் செய்யப்போவதில்லை, எப்படியோ கட்டாய வரி செலுத்தும் நடுத்தர வர்கத்தின் கஷ்டம் நீதிமன்றத்துக்கு கூட புரியவில்லை என்பது வருத்தம். பிராடுகளுக்கு தான் இங் மதிப்பு அதிகம் என்பது உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
05-ஆக-202208:07:26 IST Report Abuse
SKANDH சசிகலா விட பிஜேபி கூட்டணிக்கு ready dhaan.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
05-ஆக-202207:54:12 IST Report Abuse
சீனி வாரிசு இல்லாமல் பல கோடி சொத்து இருந்து என்ன பயன்? கண்டவர்களும் சாப்பிடுவார்கள். பேசாமல் எம்.ஜி.ஆர் மாதிரி அதிமுக அறக்கட்டளைக்கும், பல அனாதை, முதியவர்களை பராமரிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் சின்னம்மா இருக்கும் போதே மனநிறைவாக கொடுத்துவிடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X