'வால்வோ' பஸ்களில் பயணியர் குறைவு; பி.எம்.டி.சி.,க்கு தொடர் நஷ்டம்

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பெங்களூரு : பி.எம்.டி.சி.,யின் 'வால்வோ ஏசி' பஸ்களின் பயண கட்டணத்தை, 34 சதவீதம் குறைத்தும் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதன் விளைவாக 50 சதவீதம் பஸ்களை இயக்க முடியவில்லை.பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம், 836 'வால்வோ ஏசி' பஸ்களை வைத்துள்ளது. கொரோனா தொற்று கால் பதிக்கும் முன், 736 பஸ்கள் இயக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கால் வால்வோ பஸ்களின் போக்குவரத்து
வால்வோ பஸ், பிஎம்டிசி, வால்வோ ஏசி பஸ், Volvo Bus, BMTC, Volvo AC Bus,

பெங்களூரு : பி.எம்.டி.சி.,யின் 'வால்வோ ஏசி' பஸ்களின் பயண கட்டணத்தை, 34 சதவீதம் குறைத்தும் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதன் விளைவாக 50 சதவீதம் பஸ்களை இயக்க முடியவில்லை.

பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம், 836 'வால்வோ ஏசி' பஸ்களை வைத்துள்ளது. கொரோனா தொற்று கால் பதிக்கும் முன், 736 பஸ்கள் இயக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கால் வால்வோ பஸ்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தொற்று குறைந்தவுடன், பஸ்கள் இயக்கப்பட்டது என்றாலும், பயணியரிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

எனவே விமான நிலையத்துக்கு, இணைப்பு ஏற்படுத்தும் 110 'வாயு வஜ்ரா', மற்ற இடங்களில் 265 'வால்வோ ஏசி' பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அனைத்து பஸ்களையும் இயக்க முடியவில்லை. இது பி.எம்.டி.சி.,க்கு பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது.'ஏசி' வால்வோ பஸ்களை நிர்வகிக்க, அதிகமாக செலவாகிறது. ஆனால் மிகவும் குறைவான வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம் பஸ்களை நிர்வகிக்கவே போதவில்லை.

50 சதவீதம் பஸ்கள் ஓடாமல், டிப்போவில் நிறுத்தப்பட்டுள்ளதால், அவை பழுதடையும் என, அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.பி.எம்.டி.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா பரவ துவங்கிய பின், பெங்களூரின் பெரும்பாலான ஐ.டி., நிறுவனங்கள், வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறையை கொண்டு வந்தன. அது, இப்போதும் தொடர்கிறது. இருந்தாலும் படிப்படியாக, நிறுவனங்கள் செயல்பட துவங்கியுள்ளதால், வரும் நாட்களில், அனைத்து பஸ்களும் இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srprd -  ( Posted via: Dinamalar Android App )
05-ஆக-202209:55:11 IST Report Abuse
Srprd The buses were in red colour for a long time, which made the buses unique, and it looked very good. The present blue colour is less attractive. Bring the red colour back !!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X