மக்கள் மறக்காத ‛2ஜி' ஊழல்; தி.மு.க., மீது அண்ணாமலை பாய்ச்சல்

Updated : ஆக 05, 2022 | Added : ஆக 05, 2022 | கருத்துகள் (54) | |
Advertisement
சென்னை-''தி.மு.க.,வை சேர்ந்த ஆ.ராசாவின், '2ஜி' அலைக்கற்றை ஊழலை, மக்கள் இன்னும் மறக்கவில்லை; பசுமையாக ஞாபகம் வைத்துள்ளனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:பார்லிமென்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தமிழில் பதில் அளித்தார். அதை கேட்காமல், தமிழக எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-''தி.மு.க.,வை சேர்ந்த ஆ.ராசாவின், '2ஜி' அலைக்கற்றை ஊழலை, மக்கள் இன்னும் மறக்கவில்லை; பசுமையாக ஞாபகம் வைத்துள்ளனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



latest tamil news




அவர் அளித்த பேட்டி:பார்லிமென்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தமிழில் பதில் அளித்தார். அதை கேட்காமல், தமிழக எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களின் செயலால், மத்திய நிதி அமைச்சர் கூறிய உண்மையை மறைக்க முடியாது.ஜி.எஸ்.டி., கவுன்சில், 'பிராண்டட்' உணவு பொருட்களுக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதித்தது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் விரிவாக பதில் அளித்தார்.

அதற்கு, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் அளித்த அறிக்கையில் பொய் தகவல்கள் இடம் பெற்றிருந்தன.மே மாதம் வரை, தமிழகத்திற்கு வர வேண்டிய மொத்த ஜி.எஸ்.டி., நிலுவையும் வழங்கப்பட்டு விட்டது. சரியான முறையில் அரசை நிர்வகிக்க தெரியாமல் தியாகராஜன், மத்திய அரசை குறை கூறுகிறார். மத்திய அரசு, துறைமுகம், ரயில், சாலை ஆகிய துறைகளின் திட்டங்களுக்காக, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது போல், வேறு எந்த மாநிலத்திற்கும் ஒதுக்கியதில்லை.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்ததும், தி.மு.க.,வினர் மத்திய அரசை குறை கூறுகின்றனர். நாட்டிற்கு, '5ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம் வாயிலாக, 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதுவே, இதுவரை நடந்த அலைக்கற்றை ஒதுக்கீடுகளில் கிடைத்த வருவாயில் அதிகம்.

இந்த ஏலம் வெளிப்படையாக நடந்துள்ளது. மொத்த அலைக்கற்றையும் விற்கப்படவில்லை; பாதி தான் விற்கப்பட்டுள்ளது. சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசில், தி.மு.க.,வை சேர்ந்த ஆ.ராசா, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, 2008ல், '2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு, 2001ல் நிர்ணயித்த அடிப்படை விலை வழங்கப்பட்டது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்று ஏலம் விடப்பட்டது. இதற்கு பணப் பரிமாற்றங்கள் நடந்தன.

இது போன்ற முறைகேடுகள் எங்கும் நடந்ததில்லை. '2ஜி' அலைக்கற்றை ஊழலை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ராசா எழுப்பிய குற்றச்சாட்டை ஏன் காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் கேட்கவில்லை?தி.மு.க., - எம்.பி., ஒருவர், மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, தன் சகோதரர் நடத்திய, 'டிவி' நிறுவனத்திற்கு முறைகேடாக 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கினார். அவர் தான், நல்ல நிலையில் இருந்த பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை குட்டிச்சுவராக்கினார்.


latest tamil news



பா.ஜ., அரசியல் என்பது மத அரசியல் கிடையாது. சிவபெருமானை அவமானப்படுத்திய ஒருவர் மீது, பா.ஜ., 42 இடத்தில் புகார் அளித்தது. ஒரு இடத்தில் கூட புகார் பெறப்படவில்லை. சினிமா 'ஸ்டன்ட் மாஸ்டர்' கனல் கண்ணன் பேசுவது தவறு என்றால், ஹிந்து கடவுள்களை விமர்சித்து தி.மு.க.,வினர் பேசுவது பாவம். கருத்து சுதந்திரத்தில் மாநில அரசின் நிலைப்பாடு என்பது, அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.

மின் துறை ஊழல் தொடர்பாக, நான் தெரிவிக்கும் புகார்களுக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி, என் மீது புகார் அளித்து கைது செய்யட்டும். அவரையும், அவரின் சகோதரரையும் பற்றி முன்பு முதல்வர் ஸ்டாலின் புகார் கூறியிருக்கிறார். தற்போது, செந்தில் பாலாஜி உத்தமர் என்றும், அவரை பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறி விட்டால், நான் அவரை பற்றி பேசுவதை நிறுத்தி விடுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஆக-202214:27:06 IST Report Abuse
ஆரூர் ரங் நீரா ராடியா டேப்கள் மட்டுமே போதும். அதில் கனியக்கா பேசியது🙃 சூப்பர். மீண்டும் பெரியசாமி, ஜாஃபர் சேட் மேல் இப்போது விசாரணை நடக்கிறது. பல எலும்புக் கூடுகள் வெளிவரும்
Rate this:
Cancel
05-ஆக-202214:22:05 IST Report Abuse
ஆரூர் ரங் Suri சமாளிக்காதீர். சுப்ரீம் கோர்ட் ராசா வாரிக் கொடுத்த 122 லைசென்ஸ் களை முறைகேடாக கொடுத்தவை என்று கூறி கேன்சல் செய்தது இதே தினமலர் இதழில் வந்த செய்தி. அந்தத் தீர்ப்பு இன்னும் அமலில் உள்ளது. ஒரு அமைச்சராக 2 ஜி யில் ராசா தெரிந்தே செய்த420😛 தவறால் தங்களுக்கு லைசென்ஸ் கேன்சல் மூலம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கூறித்தான் வீடியோகான் மத்திய அரசின் மீது வழக்கு போட்டது. ஏனெனில் அமைச்சர் என்ற முறையில் செய்ததற்கு தனிப்பட்ட நபர் மீது வழக்குப்போட சட்டத்திலிடமில்லை. ஆக ராசா செய்தது சந்தேகமில்லாமல் அயோக்கியத்தனம்தான்👹.
Rate this:
Cancel
05-ஆக-202212:38:37 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 ............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X