சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும்: பா.ஜ., தலைவர்களுக்கு அமித்ஷா கட்டளை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பெங்களூரு : அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு இப்போதில் இருந்தே தயாராகும்படி, கர்நாடக பா.ஜ., தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இரவு பெங்களூரு வந்தார். ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். நேற்று காலை,
அமித்ஷா, கர்நாடக பாஜ, கர்நாடக சட்டசபை தேர்தல் , Amit Shah, Karnataka BJP, Karnataka Assembly Elections,

பெங்களூரு : அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு இப்போதில் இருந்தே தயாராகும்படி, கர்நாடக பா.ஜ., தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இரவு பெங்களூரு வந்தார். ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். நேற்று காலை, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை வரவழைத்து, அவருடன் சிற்றுண்டி சாப்பிட்டார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அடுத்த சட்டசபை தேர்தலில் தன் இளைய மகன் விஜயேந்திராவுக்கு ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுங்கள் என்று எடியூரப்பா பேசியதாகவும்; மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவதாக, அவர் உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தட்சிண கன்னடாவில் 10 நாட்களில் மூன்று கொலை சம்பவங்கள் நடந்தது குறித்து, மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவை வரவழைத்து கடிந்துள்ளார்.அவரது பதில் திருப்தி அளிக்காததால், ஊடகத்தினர் முன் பதில் அளிப்பதற்கு முன் முழு விபரம் பெற்றிருக்க வேண்டும். உள்துறையை கட்டுகோப்பாக நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதன்பின், முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல், தேசிய பொது செயலர் சி.டி.ரவி, துணை தலைவர் நிர்மல் குமார் சுரானா, புதிய பொது செயலர் ராஜேஷ் ஆகியோருடன் ஆலோசித்தார்.அப்போது, சட்டசபை தேர்தல் குறித்து மாநில தலைவர்களுக்கு விளக்கியுள்ளார். 'இம்முறை முழு பெரும்பான்மையுடன் மாநகராட்சியையும், மாநிலத்தையும் கைப்பற்ற வேண்டும். இதற்கான பணியில் இப்போதிலிருந்தே ஈடுபடுங்கள்' என்று கூறியுள்ளதாக தகவல் வெளியானது.

பின், இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய, 'சங்கல்ப் சே சித்தி' என்ற மாநாட்டில் பங்கேற்று, மத்திய அரசின் சாதனைகள் குறித்து பேசினார். மாநாட்டுக்கு பின், நகரின் எலஹங்கா பகுதியில் அமைந்துள்ள கே.எம்.எப்.,வின் பால் பவுடர் மையத்தை அமித் ஷா ஆய்வு செய்தார்.இதையடுத்து, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நேற்று மாலை டில்லி புறப்பட்டு சென்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X