புதுச்சேரியில் கடந்த 4 மாதங்களில் ஜி.எஸ்.டி., வருவாய் 61.1 சதவீதம் அதிகரிப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த 4 மாதங்களில் ஜி.எஸ்.டி., வருவாய் அதிகரித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில், ரூ.1,823.17 கோடி ஜி.எஸ்.டி., வசூலாகி இருந்தது. இதில் எஸ்.ஜி.எஸ்.டி., - சி.ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மற்றும் செஸ் ஆகியவை உள்ளடக்கம்.அதேபோல், 2020--21ல் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1,645.66 கோடி, 2019--20ல் ரூ.1,869 கோடியாக இருந்தது.இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் ஜி.எஸ்.டி.,

புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த 4 மாதங்களில் ஜி.எஸ்.டி., வருவாய் அதிகரித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில், ரூ.1,823.17 கோடி ஜி.எஸ்.டி., வசூலாகி இருந்தது. இதில் எஸ்.ஜி.எஸ்.டி., - சி.ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மற்றும் செஸ் ஆகியவை உள்ளடக்கம்.

அதேபோல், 2020--21ல் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1,645.66 கோடி, 2019--20ல் ரூ.1,869 கோடியாக இருந்தது.இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் ஜி.எஸ்.டி., வசூல் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளது.இதுதொடர்பாக சி.ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:மத்திய சி.ஜி.எஸ்.டி., மூலம் வரும் வருவாய் நடப்பு நிதியாண்டில் ஜூலை 2022 வரை ரூ.243 கோடியாக உயர்ந்துள்ளது.

2021 ஜூலை வரை வசூலான ரூ.164 கோடியுடன் ஒப்பிடுகையில், சி.ஜி.எஸ்.டி., வசூல் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.அதேபோல், மாநில ஜி.எஸ்.டி., (எஸ்.ஜி.எஸ்.டி.,) வசூல் இந்த நிதியாண்டின் ஜூலை மாதம் வரை ரூ. 398 கோடியாக உள்ளது.இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், ரூ.247 கோடியாக இருந்தது. வசூல் அதிகரிப்பு 61.1 சதவீதமாகும். கடந்த நான்கு மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல், தேசிய அதிகரிப்பை விட, புதுச்சேரியில் அதிகமாக உள்ளது.

15,030 வரி செலுத்துவோர் எஸ்.ஜி.எஸ்.டி., துறையின் கீழ் இருந்த நிலையில், 8,000 தொழில் முனைவோர் சி.ஜி.எஸ்.டி.,யின் கீழ் வருகின்றனர்.மருந்து உற்பத்தி, ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எஃகு ஆகிய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஒப்பீட்டளவில் நல்ல வருவாய் ஈட்டியுள்ளன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X