மாணவிக்கு பாலியல் தொல்லை'போக்சோ'வில் ஆசிரியர் கைது

Added : ஆக 05, 2022 | |
Advertisement
அரியாங்குப்பம் : தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியரை, 'போக்சோ' வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, மரப்பாலம் நுாறடி சாலையில் செவன்த்டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, கண்டமங்கலத்தை சேர்ந்த சகாய தோனி வளவன் உயிரியல் ஆசிரியராக பணி புரிந்தார்.இவர், அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவருக்கு,

அரியாங்குப்பம் : தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியரை, 'போக்சோ' வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, மரப்பாலம் நுாறடி சாலையில் செவன்த்டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, கண்டமங்கலத்தை சேர்ந்த சகாய தோனி வளவன் உயிரியல் ஆசிரியராக பணி புரிந்தார்.இவர், அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவருக்கு, மொபைல் போனில் ஆபாச படங்கள், குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவினர், முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.அதை தொடர்ந்து, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆசிரியர் சகாய தோனி வளவன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.அவரை நேற்று புதுச்சேரி ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில், சகாய தோனி வளவன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X